

துபாய் / கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த ராகுல் பாலா துபாயில் சமையல் கலைஞராக பணிபுரிகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், “வேலைக்காக துபாய்க்குவர நினைப்பவர்கள் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
நகரத்தின் அதிகப்படியான வாழ்க்கைச் செலவு காரணமாக, ஒரு சாதாரண தொழிலாளி தினசரி செலவுகளைச் சமாளிப்பதும், குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதும் மிகவும் கடினம்.
வெளிநாடு செல்லும் கனவு நனவான போதிலும், துபாய் அனுபவம் இந்திய வாழ்க்கையின் அருமையை எனக்கு உணர வைத்துள்ளது. குறிப்பாக, அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவழிக்க வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பது இங்கு வாழ்வதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் ஒரு சாதாரண உணவுக்கே குறைந்தபட்சம் 10 திர்ஹாம் (சுமார் ரூ.260) வரை செலவாகிறது. இந்தப் பதிவு சமூக வலை தளப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.