50 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி சீருடையில் வந்து நெகிழ வைத்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி சீருடையில் வந்து நெகிழ வைத்த முன்னாள் மாணவர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: பழைய நினை​வு​களை மீட்​டெடுக்க, 50 ஆண்​டு​களுக்​குப் பிறகு கல்வி நிலை​யத்​துக்கு சீருடை​யில் வந்து அனை​வரை​யும் முன்னாள் மாணவர்​கள் நெகிழ வைத்​தனர்.

இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளப் பக்​கத்​தில் ராகேஷ் நாகர் என்ற பெயரைக் கொண்ட பதிவர் ஒரு வீடியோவை வெளி​யிட்​டுள்​ளார். அதில் நாங்​கள் படித்த பள்​ளிக்கு 50 ஆண்​டு​களுக்​குப் பிறகு சென்று பழைய நினை​வு​களை மீட்​டெடுத்​தோம் என்று தெரி​வித்​துள்​ளார்.

அந்த வீடியோ​வில் தோன்​றும் அனை​வரும் சுமார் 60 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​களாக உள்​ளனர். அதில் உள்​ளவர்​கள் பள்​ளிச் சீருடை​யில் வந்​துள்​ளனர். மேலும் தோளில் தண்​ணீர் பாட்​டில், முதுகில் அணி​யும் புத்​தகப் பைகளு​டன் உற்​சாக​மாக பள்​ளிக்கு வரு​கின்​றனர்.

பள்ளி வகுப்​பறை​யில் அமர்ந்து பாடம் படிப்​பது போல​வும், மைதானத்​தில் கில்​லி-​தாண்டு விளை​யாடு​வது, ஒரு​வரின் சட்​டை​யின் பின்​பகு​தி​யைப் பிடித்​துக் கொண்டு ரயில் வண்டி போல செல்​வது, 7 கல் விளை​யாட்டு விளை​யாடு​வது என பள்​ளி​பருவத்தில் செய்த அனைத்து சேட்​டைகளை​யும் அவர்​கள் செய்​கின்​றனர்.

தற்​போது இந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. அனை​வரும் இந்த வீடியோவைப் பார்த்து தங்​களை தங்​கள் பள்​ளி​களு​டன் தொடர்​புபடுத்​திக் கொண்டு நினை​வு​களை பகிர்ந்து கொள்​கின்​றனர். இவர்​கள் அனை​வரும் அந்​தப் பள்​ளி​யில் 1976-ம் ஆண்டு படித்​தவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஆனால், இவர்​கள் யார், எந்த நகரைச் சேர்ந்​தவர்​கள், எந்​தப் பள்​ளி, நிகழ்ச்​சியை ஒருங்​கிணைத்​தவர் யார் என்ற விவரம் வீடியோ​வில்​ குறிப்​பிடப்​பட​வில்​லை.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி சீருடையில் வந்து நெகிழ வைத்த முன்னாள் மாணவர்கள்
யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம்: ரஷ்யா மீதான தடைகள் சட்டம் குறித்து இந்தியா கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in