‘அனைத்து உயிர்களும் சமமே’ - தூத்துக்குடியில் ஈர்க்கும் கிறிஸ்துமஸ் குடில்!

 ‘இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே’ என்ற கருத்தை மையப்படுத்தி தூத்துக்குடி ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில்.

‘இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே’ என்ற கருத்தை மையப்படுத்தி தூத்துக்குடி ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில்.

Updated on
1 min read

தூத்துக்குடி: இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே என்ற கருத்தை மையப்படுத்தி தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தூத்துக்குடி பெறைரா தெருவை சேர்ந்தவர் நி.இசிதோர் பர்னாந்து (61). தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருகிறார்.

குறிப்பாக அதன் பின்னணியில் சமூகச் சிந்தனைகளை தூண்டும் விதமாக ஓவியங்கள் வரைந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மதநல்லிணக்கம், உலக சமாதானம், இலங்கை தமிழர் பிரச்சினை, தேசிய ஒருமைப்பாடு, தீவிரவாதம் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுனாமி பாதிப்பு, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, கரோனா பாதிப்பு என ஏற்கெனவே பல கருத்துக்களை மையமாக வைத்து கடந்த 20 ஆண்டுகளாக குடில் அமைத்துள்ளார்.

அந்த வகையில் 21-வது ஆண்டாக இந்த ஆண்டு அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தனது குடிலை இசிதோர் பர்னாந்து வடிவமைத்துள்ளார்.

அவர் கூறியதாவது: இறைவன் படைப்பில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், பூச்சியினங்கள் என அனைத்துமே சமம் தான். இதனை அனைவரும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், சிறு பூச்சிகள் போன்றவற்றை படங்களாகவும், ஓவியமாகவும் பின்னணியில் வைத்து கிறிஸ்துமஸ் குடிலை வடிவமைத்துள்ளேன். இந்த குடிலை பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p> ‘இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே’ என்ற கருத்தை மையப்படுத்தி தூத்துக்குடி ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில்.</p></div>
கூட்டணியை ஸ்டாலின் இறுக்கிப் பிடிப்பது ஏன்? - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in