

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை வளர்ச்சி குறித்த பாடல் சிடியை வெளியிட்ட வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் முத்துராமலிங்கம். உடன், நிர்வாக இயக்குநர்கள் அம்மா மெஸ் செந்தில்வேல், ஜிஆர்டி குழுமம் அனந்த பத்மநாபன், பொன் பியூர் கெமிக்கல் பொன்னுசாமி, தங்கமயில் ஜூவல்லரி ரமேஷ், நடிகர் சூரி.
மதுரை: வாழ்வில் வெற்றிபெற நமக்கு நேரிடும் அவமானங்களுக்கு எதிர்வினையாற்றாமல் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என தொழில் முனைவோருக்கு நடிகர் சூரி ஆலோசனை வழங்கினார்.
வேலை தேடும் இளைஞர் களை, மற்றவர்களுக்கு வேலை வழங்கும் தொழில் முனைவோராக மாற்றும் நோக்குடன், `இணைப்பு' (THE CONNECT) அமைப்பின் சார்பில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் பேசுகையில், 'மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிக விமானங்கள் வந்து சென்றால்தான் மதுரை வளர்ச்சி அடையும். இதற்கு டெல்லியே திரும்பிபார்க்கும் அளவுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாரத்தான் போட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்', என்றார்.
நடிகர் சூரி பேசியதாவது: ஏழ்மையால் மாநகராட்சிப் பள்ளியில்தான் படித்தேன். மேற்படிப்புப் படிக்க முடியாத தால், திரைப்பட ஆசையில் சென்னைக்குச் சென்றேன். அங்கு 8 ஆண்டுகளாக லாரி கிளீனர், சாக்கடை அள்ளுதல், பெயின்ட் அடித்தல் வேலை களைச் செய்தேன்.
பல போராட்டத்துக்குப் பின்னர் 2008-ல் ‘வெண்ணிலா கபடிக் குழு’ பட வாய்ப்புக் கிடைத்தது. நான் பெயின்ட் அடித்த அதே துணிக் கடைக்குச் சென்றபோது முதலாளியின் அறையில் அமர வைத்து, துணிகளைத் தேர்வு செய்யும் அளவுக்கு வாழ்க்கை மாறியுள்ளது. அவமானங்களுக்கு எதிர் வினையாற்றாமல் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.
நான் இங்கு நிற்க முழுக் காரணம் குடும்பம்தான். எனவே எந்தக் காலத்திலும் உறவுகளை விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். பொன் பியூர் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் பொன்னு சாமி பேசுகையில், `வேலை தேடி சென்னை சென்ற நான் சில ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தேன்.
கடின உழைப்பால் எனது நிறுவனம் இன்று வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது', என்றார். ஜிஆர்டி ஜுவல்லரி நிர்வாக இயக்குநர் அனந்தபத்மநாபன் பேசுகையில், `தொழில் முனை வோர் மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்', என்றார்.
தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் ரமேஷ் பேசுகையில், `தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிராண்ட் உரு வாக்கம் செய்ய முடிகிறது. அனுபவத்தின் மூலமே இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்', என்றார்.
அம்மா மெஸ் நிர்வாக இயக்குநர் செந்தில்வேல் கூறுகையில், `அம்மா என்ற பெயரில் உண வகத்தை 1992-ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கினோம். எங்களின் தனித்துவமான தயாரிப்புகளால் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் வரு கின்றனர்', என்றார்.