கலவை அரசு மருத்துவமனைக்கு இலவச ரத்த பரிசோதனை கருவி வாங்குவதற்கான காசோலையை ஆட்சியர் வளர்மதி யிடம் வழங்கிய ஓய்வு பெற்ற மருத்துவர் செங்கோட்டையன்.
கலவை அரசு மருத்துவமனைக்கு இலவச ரத்த பரிசோதனை கருவி வாங்குவதற்கான காசோலையை ஆட்சியர் வளர்மதி யிடம் வழங்கிய ஓய்வு பெற்ற மருத்துவர் செங்கோட்டையன்.

கலவை அரசு மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை கருவி வாங்க ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நிதியுதவி

Published on

ஆற்காடு: கலவை அரசு மருத்துவ மனைக்கான ரத்தப் பரிசோ தனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) கருவி வாங்கு வதற்காக காசோலையை மாவட்ட ஆட்சியர் வளர்மதி யிடம், ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், ஆற்காடு, கலவை ஆகிய 5 இடங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கலவை வட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏராளமான ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற கலவை அரசு மருத்துவ மனைக்கு வருகின்றனர்.

இங்கு வரும் மக்களின் நலனுக்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும், இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்றவருமான மருத்துவர் செங்கோட்டையன், கலவை அரசு மருத்துவமனைக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பிலான ரத்தப் பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) வாங்குவதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வளர்மதி யிடம் நேற்று வழங்கினார்.

அப்போது, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி, சமூக ஆர்வலர் புருஷோத் தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கருவி மூலமாக மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை உட்பட பல்வேறு வியாதிகள் குறித்து கண்டறிந்து, அதன் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும். இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in