தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதியர்

தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதியர்
Updated on
1 min read

புதுடெல்லி: தங்களது இரண்டாவது குழந்தையை இனிதே வரவேற்றுள்ளனர் யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2022 ஜனவரியில் ஓரியன் எனும் மகன் பிறந்து குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டின் அசத்தல் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் தேசத்துக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றவர். 402 சர்வதேச போட்டிகளில் விளையாடி 11,778 ரன்கள் மற்றும் 148 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். தனது அபார ஆட்டத்திறனால் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட அவர் 2016-ல் ஹேசல் கீச்சை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு இரண்டாவதாக மகள் பிறந்துள்ளதாக சொல்லி இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு ஒன்றை யுவராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அவரது மனைவி ஹேசல் கீச், மகன் மற்றும் மகளும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “உறக்கமில்லா இரவுகள் எங்கள் செல்ல மகளை வரவேற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. இதோ எங்கள் இளவரசி Aura” என அந்த பதிவில் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in