140 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் தலை துண்டிப்பு

140 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் தலை துண்டிப்பு
Updated on
1 min read

சூரத்: குஜ​ராத் மாநிலம் சூரத்​தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். சமூக வலை​தளங்​களில் தொடர்ந்து பதிவு​களை பதி​விட்டு வரும் பிரின்​ஸ், பிகேஆர் பிளாகர் என்ற பெயரில் வீடியோக்​களைப் பதி​விட்டு வரு​கிறார். வேக​மாக பைக் ஓட்​டு​வ​தில் வல்​ல​வ​ரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்​டார் சைக்​கிளை அதிவேகத்​தில் ஓட்டி அதை வீடியோ​வாகப் பதி​விட்டு வந்​தார்.

இந்​நிலை​யில் அண்​மை​யில் சூரத்​தில் உள்ள கிரேட் லைனர் மேம்​பாலத்​தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்​டர் வேகத்​தில் பைக்கை ஓட்​டி​யுள்​ளார். அப்​போது கட்​டுப்​பாட்டை இழந்த இவரது வாக​னம் தரை​யில் விழுந்து நொறுங்​கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனி​யாக துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்​தது. பைக் வேக​மாக வந்​த​தால் தரை​யில் விழுந்​த​போது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்​டார். அப்​போது​தான் இவரது தலை துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்து சிதறியது. பைக் ஓட்​டிய​போது, பிரின்ஸ் படேல் ஹெல்​மெட் அணி​ய​வில்லை என்று தெரிய​வந்​துள்​ளது.

கடந்த செப்​டம்​பர் மாதத்​தில்​தான் இந்த புதிய பைக்​கை, பிரின்ஸ் படேல் வாங்​கி​யுள்​ளதும் தெரிய​வந்​துள்​ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்​பகு​தி​யில் வசித்து வரு​கிறார். தினந்​தோறும் பால் விற்று அதில் வரும் பணத்​தில் வாழ்க்​கையை நடத்தி வரு​கிறார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

140 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் தலை துண்டிப்பு
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்: பாஜக 7, ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in