கோப்புப்படம்

கோப்புப்படம்

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்: பாஜக 7, ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி

Published on

புதுடெல்லி: டெல்லி மாநக​ராட்​சி​யில் காலி​யாக உள்ள 12 வார்​டு​களுக்​கான இடைத்​தேர்​தல் கடந்த 30-ம் தேதி நடை​பெற்​றது. இதில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. இதில் பாஜக 7 வார்​டு​களில் வெற்றி பெற்​றது. டெல்​லி​யில் 10 மாதங்​களுக்கு முன் ஆட்​சி​யில் இருந்து அகற்​றப்​பட்ட ஆம் ஆத்மி 3 வார்​டு​களு​டன் இரண்​டாவது இடத்தை பிடித்​தது. காங்​கிரஸ், அகில இந்​திய பார்​வர்டு பிளாக் ஆகிய கட்​சிகள் தலா ஓரிடத்​தில் வெற்றி பெற்​றுள்​ளன.

பாஜக​வின் 9 வார்​டு​கள் இடைத்​தேர்​தலை சந்​தித்த நிலை​யில் அக்​கட்சி 2 வார்​டு​களை இழந்​துள்​ளது. ஒன்றை காங்​கிரஸ் கட்​சி​யிட​மும் மற்​றொன்றை பார்​வர்டு பிளாக் கட்​சி​யிட​மும் பாஜக இழந்​துள்​ளது.

மேலும் பாஜக​வின் நரைனா வார்டை இம்​முறை ஆம் ஆத்மி கைப்​பற்​றி​யுள்​ளது. அதே வேளை​யில் ஆம் ஆத்​மி​யின் சாந்​தினி சவுக் வார்​டில் இம்​முறை பாஜக வென்​றுள்​ளது. டெல்லி மாநக​ராட்​சி​யில் மொத்​த​முள்ள 250 இடங்​களில் பாஜ​வின் பலம் இனி 122 ஆக இருக்​கும். ஆம் ஆத்​மி​யின் பலம் 102 ஆக நீடிக்​கும். காங்​கிரஸின் பலம் 9 ஆக அதி​கரிக்​கும்.

டெல்லி முதல்​வ​ராக பாஜக​வின் ரேகா குப்தா பொறுப்​பேற்ற பிறகு அங்கு நடை​பெற்ற முதல் தேர்​தல் இது​வாகும். இது​போல் டெல்லி ஆத்மி தலை​வ​ராக சவுரப் பரத்​வாஜ் பொறுப்​பேற்ற பிறகு அக்​கட்சி எதிர்​கொள்​ளும் முதல் தேர்​தல் இது​வாகும்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
நாடாளுமன்ற வளாகத்தில் கார்கேவுக்கு மசாஜ் செய்த ராகுல் காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in