

புதுடெல்லி: வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில், வேட்பாளர்கள் தங்கள் சொத்துவிவர்ம், கல்வித்தகுதி, குற்றப்பின்னணியை மறைத்திருந்தால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். வழக்குத் தொடர தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி அவசியம் இல்லை’’ என்று தீர்ப்பளித்துள்ளனர்.