ஊரக வேலை திட்ட விவகாரம்; நாட்டை சுரண்டியவர்கள் கேள்வி கேட்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் விமர்சனம்

யோகி ஆதித்யநாத் | கோப்புப் படம்

யோகி ஆதித்யநாத் | கோப்புப் படம்

Updated on
1 min read

லக்னோ: ‘‘நாட்​டின் வளத்தை சுரண்​டிய​வர்​கள், பிரதமர் மோடி​யின் வெளிப்​படை​யான நிர்​வாகத்தை கேள்வி கேட்​கின்​றனர்” என்று காங்​கிரஸ் மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் மீது உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​னார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டத்​துக்​குப் பதில், ‘விக் ஷித் பாரத் கேரன்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிக மிஷன் (கி​ராமின்)’ - (விபி-ஜி ஆர்​ஏஎம் ஜி) என்ற பெயரில் மத்​திய அரசு சட்​டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்​கிரஸ் மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: புதி​தாக கொண்டு வரப்​பட்ட விபி-ஜி ஆர்​ஏஎம் ஜி ஊரக வேலை​வாய்ப்பு திட்​டத்தை விளக்​கு​வதற்​காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்​பாடு செய்​தேன். இந்த நாட்டை பல ஆண்​டு​களாக கொள்ளை அடித்​தவர்​கள் (காங்​கிரஸ், இண்​டியா கூட்​டணி கட்​சி​யினர்), பிரதமர் மோடி​யின் வெளிப்​படை​யான நிர்​வாகத்தை கேள்வி கேட்​கின்​றனர். நாட்​டில் ஏழைகள், இளைஞர்​களை பட்​டினி​யில் வாடச் செய்த எதிர்க்​கட்​சி​யினர், தற்​போது நாட்டை வலிமை​யாக்​கு​வதற்கு எடுக்​கப்​படும் வெளிப்​படை​யான நடவடிக்​கைகள் மீது கேள்வி எழுப்​பு​கின்​றனர்.

பிரதமர் மோடி​யின் மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய ஊரக வேலை​வாய்ப்பு திட்​டம் கிராமப்​புற மக்​களின் வாழ்க்கையை உயர்த்​தும். வேலை​வாய்ப்பை உறுதி செய்​யும். முன்பு 100 நாட்​களாக இருந்த வேலை​வாய்ப்பு புதிய திட்​டத்​தில் 125 நாட்​களாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​டத்​தால் கிராமப்​புறங்​களில் உள்​கட்​டமைப்​பு​கள் நிரந்​தரப்​படுத்​தப்​படும். இந்த திட்​டம் கிராமங்​களை மைய​மாகக் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

ஏற்​கெனவே இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டத்​தில் போலி வேலை அட்​டை, வேலைக்கே வராமல் போலி​யாக வந்​தது போல் கணக்கு காட்​டுதல், தாமத​மாக ஊதி​யம் வழங்​குதல், செலவு கணக்​கு​கள் இல்​லாமை என பல மட்​டங்​களில் ஊழல் மலிந்து கிடந்​தது. சரி​யான நேரத்​துக்கு வேலை வழங்​கு​வ​தில்​லை, சரி​யான நேரத்​துக்கு ஊதி​யம் வழங்​கு​வது இல்லை என்று கிராம மக்​கள் புகார் கூறுகின்​றனர்.

தற்​போது பிரதமர் மோடி கொண்டு வந்​துள்ள திட்​டத்​தால் கிராம மக்​கள் பெரும் பலனடை​வார்​கள். இந்​தச் சூழ்​நிலை​யில் கடந்த காலங்​களில் இது​போன்ற திட்​டங்​களை ஏன் செய்​ய​வில்லை என்று பொது​மக்​கள் கேள்வி எழுப்​பி​னால் எதிர்க்​கட்​சிகளால் என்ன பதில் சொல்லமுடி​யும்? அந்த பயத்​தில்​தான் புதிய திட்​டத்தை எதிர்க்​கின்​றனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>யோகி ஆதித்யநாத் | கோப்புப் படம்</p></div>
மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in