

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை மாலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோனியாவுக்கு ஏற்கெனவே இருமல் பிரச்சினை உள்ளது என்றும், காற்று மாசு காரணமாக அவர் தொடர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கமான நிகழ்வுதான் என்றும் கூறப்படுகிறது.