“யோகா நம் வாழ்வின் அங்கமாக வேண்டும்” - கொல்கத்தாவில் 30,000 பேருடன் பங்கேற்ற பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

Updated on
2 min read

கொல்கத்தா: ​கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற சர்​வ​தேச யோகா தின நிகழ்ச்​சி​யில் 30 ஆயிரம் பேருடன் பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி, ‘‘நம் வாழ்​வின் அங்​க​மாக யோகா மாற வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறை​யாக பிரதம​ராக பொறுப்​பேற்ற நரேந்​திர மோடி, ஜூன் 21-ம் தேதியை சர்​வ​தேச யோகா தின​மாக அறிவிக்க வேண்​டும் என ஐ.நா.சபைக்கு கோரிக்கை வைத்​தார். இதை ஐ.நா. சபை ஏற்​றுக் கொண்​டது. இதையடுத்​து, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதலா​வது சர்​வ​தேச யோகா தினம் உலகம் முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இதையடுத்து ஆண்​டு​தோறும் சர்​வ​தேச யோகா தினம் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், 12-வது ஆண்டு சர்​வ​தேச யோகா தினம் உலகம் முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, பல்​வேறு நகரங்​களில் சிறப்பு யோகா நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்தா மாநகரில் உள்ள சிவப்பு சாலை​யில் நடை​பெற்ற பிரம்​மாண்ட யோகா நிகழ்ச்​சிக்கு பிரதமர் நரேந்​திர மோடி தலைமை தாங்​கி​னார். இதில் பங்​கேற்ற 30 ஆயிரம் பேர், பிரதமர் மோடி​யுடன் இணைந்து யோகா பயிற்​சிகளை செய்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்​.என்.ரவி, முதல்​வர் சுவேந்து அதி​காரி உள்​ளிட்​டோரும் கலந்து கொண்​டனர். யோகா நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த நாளில் ஒட்​டுமொத்த தேச​மும், உலக​மும் இணைந்​திருப்​பது​போல தோன்​றுகிறது. இது​தான் யோகா​வின் சக்​தி. அனை​வரை​யும் யோகா ஒன்​றிணைக்​கிறது.

‘ஆரோக்​கிய​மான முது​மைக்​கான யோகா’ என்​பதே இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள். வயது என்​பது மனிதனின் திறனைக் குறைத்​து​விடக் கூடாது. அதை உறு​தி​செய்ய நாம் பணி​யாற்​றலாம் என்​பதே இதன் அர்த்​தம். வயதாகும்​போது மக்​கள் தங்​களது உடல் ஆற்​றல், மன வலிமை, நோய் எதிர்ப்​புத் திறன் ஆகிய​வற்றை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும், மனித வாழ்க்கை தொடர்ச்​சி​யான வளர்ச்​சியை நோக்​கிச் செல்​ல​வும் யோகா உதவு​கிறது.

நாம் 20 வயதில் இருந்​ததை​விட 40 வயதில் அதிக நெகிழ்​வுத் ​தன்​மை​யுடன் இருக்க வேண்​டும். 30 வயதை​விட 50 வயதில் அதிக ஆற்​றலுடன் இருக்க வேண்​டும். 50 வயதை​விட 70 வயதில் வாழ்க்கை முறை நோய்​களை எதிர்க்​கும் திறன் கொண்​ட​வர்​களாக இருக்க வேண்​டும். இதுவே நம் இலக்​காக இருக்க வேண்​டும். இங்​கு​தான் யோகா நமக்கு உதவ முடி​யும்.

யோகா ஒரு வாழ்க்கை முறை: யோகா என்​பது ஒரு வரு​டாந்​திர நிகழ்​வாக சுருங்​கி​வி​டா​மல், அது ஒரு வாழ்க்கை முறை​யாக மாற வேண்​டும். நமது தனிப்​பட்ட வாழ்க்கை முறைக்கு மட்​டுமின்​றி, உலகின் சிறந்த எதிர்​காலத்​துக்​கும் யோகா அவசி​யம். யோகாவை ஒரு நாளுக்கு மட்​டு​மான​தாகவோ, ஒரு நிகழ்ச்​சிக்கு மட்​டு​மான​தாகவோ மட்​டுப்​படுத்த மாட்​டோம். யோகாவை நம் வாழ்​வின் ஒரு பகு​தி​யாக, நம் குடும்​பங்​களின் ஒரு பகு​தி​யாக, எதிர்​கால சந்​த​தி​யின் வாழ்க்​கை​யின் ஒரு அங்​க​மாக​வும் மாற்​று​வோம். இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​தார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற யோகா அமர்​வில் கலந்து கொண்​டார், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்.ஜெய்​சங்​கர் டெல்​லி​யின் நேரு பூங்​கா​வில் நடை​பெற்ற கொண்​டாட்​டங்​களில் பங்​கேற்​றார். மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல் மற்​றும் ஜே.பி. நட்டா ஆகியோ​ரும் யோகா தின நிகழ்​வு​களில்​ பங்​கேற்றனர்​.

<div class="paragraphs"><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். </p></div>
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in