கட்டுமான தளங்களில் தொழிலாளர் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

கட்டுமான தளங்களில் தொழிலாளர் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: கட்டுமானத் தளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்யக் கோரிய பொதுநல மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘சிக்னேச்சர் குளோபல் சிட்டி’ கட்டுமானத் தளத்தில் சுவர் மற்றும் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரி ழந்த விபத்தையடுத்து கட்டுமானத் தொழிலாளர் பாதுகாப்பை வலி யுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு்ம், ஹரியானா மாநில அரசு்ம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து தலைமை நீதிபதி அமர்வு் உத்தர விட்டது.

கட்டுமான தளங்களில் தொழிலாளர் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
அமோனியா கசிவு மரணத்துக்குப் பின்னால் சட்ட மீறல்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in