சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் உயிரிழப்பு
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பிராந்​தி​யத்​தில் உள்ள கார்​கெர் மாவட்​டத்​தின் அடர்ந்த வனப் பகு​தி​யில் ஆயுதம் ஏந்​திய மாவோ​யிஸ்ட்​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல்​கள் கிடைத்​தன.

இதன் அடிப்​படை​யில் சோட்​டேபெத்​தி​யா-பர்​தாப்​பூர் காவல் எல்​லைக்​குட்​பட்ட வனப் பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இதில் மச்​பள்ளி பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினரை நோக்கி மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தால் அங்கு இரு தரப்​பிலும் கடும் மோதல் ஏற்​பட்​டது. இந்த மோதலுக்கு பிறகு அப்​பகு​தி​யில் இருந்து பெண் மாவோ​யிஸ்ட் ஒரு​வரின் உடல் மீட்​கப்​பட்​டது.

இவர் மாவோ​யிஸ்ட் பகு​திக்​குழு உறுப்​பினர் (ஏசிஎம்) அந்​தஸ்து கொண்ட கமாண்​டர் ரூபி என அடை​யாளம் காணப்​பட்​டார். மேலும் இவர் கடந்த ஆண்டு மன்​பூர்​-மோஹ்லா மாவட்​டத்​தில் நடந்த என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்ட 'தண்​ட​காரன்யா சிறப்பு மண்​டலக் குழு தலை​வர்' விஜய் ரெட்​டி​யின் மனைவி ஆவார்.

சரண் அடை​யு​மாறு பலமுறை வேண்​டு​கோள் விடுத்​த​போ​தி​லும் ரூபி தீவிர​மாக செயல்​பட்டு வந்​துள்​ளார். பஸ்​தா​ரில் எஞ்​சி​யிருந்த கடைசி தெலுங்கு வம்​சாவளி மாவோ​யிஸ்ட்​களில் இவரும் ஒரு​வர் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ரூபி கொல்​லப்​பட்​டது பஸ்​தா​ரில் மாவோ​யிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்​கை​களில் ஒரு முக்​கிய முன்​னேற்​ற​மாக கருதப்​படு​கிறது. ஏற்​கெனவே பலவீனம் அடைந்​து​வரும் மாவோ​யிட்​களை இது மேலும் பலவீனப்​படுத்​தும் என கருதப்​படு​கிறது.

கான்​கெர் வனப் பகு​தி​யில் சுமார் 10 மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ந்து செயல்​பட்டு வரு​வ​தாக பாது​காப்பு படை​யினர் கருதுகின்​றனர். அவர்​களை​யும் பிடிக்க வனப் பகு​தி​களில் தீவிர தேடு​தல்​ வேட்​டை மேற்​கொண்​டுள்​ளனர்​.

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் உயிரிழப்பு
லாரி - வேன் மோதி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in