லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொலை - கொலையாளிக்கு லத்தி அடி

குற்ற நிகழ்வை நடித்துக் காட்டியபோது...
லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொலை - கொலையாளிக்கு லத்தி அடி
Updated on
1 min read

பாவ்நகர்: குஜ​ராத்​தில் லிவ்​-இன் உறவில் இருந்த பெண் அடித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில், பேருந்து நிலை​யத்​தில் குற்ற நிகழ்வை நடித்​துக் காட்​டிய கொலை​யாளியைக் காவல் துறை​யினர் லத்தியால் சரமாரி​யாக அடித்த சம்​பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது.

குஜ​ராத் மாநிலம் பாவ்​நகரைச் சேர்ந்த ஃபைசல் (20) மீது திருட்டு மற்​றும் வன்​முறை உள்​ளிட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் காஜல்​பன் பரையா (40) என்ற பெண்​ணுடன் கடந்த சில ஆண்​டு​களாக ‘லிவ்​-இன்’ முறை​யில் வாழ்ந்து வந்​தார். கடந்த செப்டம்​பர் 3-ம் தேதி பிற்​பகலில் பாவ்​நகர் பேருந்து நிலை​யத்​தில் காஜல்​பன் தனது நண்​பர் ரவி என்​பவருடன் நின்று கொண்​டிருந்​த​போது அங்கு வந்த ஃபைசலுடன் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. கள்​ளத்​தொடர்பு சந்​தேகம் மற்​றும் மது அருந்​து​வது தொடர்​பான தகராறில் ஆத்​திரமடைந்த ஃபைசல், காஜல்​பனை கொடூர​மாக தாக்​கி​னார்.

இதைத் தடுக்க முயன்ற நண்​பர் ரவி​யும் தாக்​குதலுக்கு உள்ளானார். பேருந்து நிலை​யத்​தில் இருந்த பொது​மக்​கள் வேடிக்கை பார்க்க, பல நிமிடங்​கள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதல் அங்​கிருந்த சிசிடிவி கேம​ரா​வில் பதி​வானது. காயமடைந்த காஜல்​பன் சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், சிகிச்சை பலனின்றி செப்​டம்​பர் 4-ம் தேதி உயி​ரிழந்​தார். காஜல்​பனின் தாயார் அளித்த புகாரின்​பேரில் நீலம்​பாக் காவல் நிலை​யப் போலீ​ஸார் ஃபைசல் மீது கொலை வழக்​குப் பதிவு செய்து அவரைக் கைது செய்​தனர்.

கொலை நடந்த முறையை ஆய்வு செய்​வதற்​காக, காவலர்கள் குற்ற நிகழ்வை மீண்​டும் நடித்​துக் காட்​டச் செய்​தனர். அப்​போது, பொது​மக்​கள் நிறைந்த இடத்​தில் ஃபைசலைக் காவல் துறை​யினர் சூழ்ந்​து​கொண்டு லத்தியால் சரமாரி​யாக விளாசினர். இந்​தக் காட்​சிகள் அடங்​கிய வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாகி வருகிறது.

லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொலை - கொலையாளிக்கு லத்தி அடி
டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in