பாக். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பெண் ராஜஸ்தானில் கைது

கைது செய்யப்பட்ட பெண்

கைது செய்யப்பட்ட பெண்

Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரி​கள் கூறிய​தாவது: ஜெய்ப்​பூரில் தேச ​விரோத சக்திகளுடன் தொடர்​பில் இருந்த கதிஜா என்​கிற பபிதா தாகத் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வாட்​ஸ்-​ அப், ஃபேஸ் ​புக் உள்​ளிட்ட சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்​த​தில் ஜெய்​ஷ்-இ-​முகம்​மது மற்​றும் பிற தீவிர​வாத அமைப்​பு​களு​டன் அவருக்கு தொடர்பு இருப்​பது தெரியவந்​தது. பாகிஸ்​தானின் முஃப்தி ஒரு​வரின் தொலைபேசி வழி​காட்​டு​தலின்​படி இஸ்​லாம் மதத்​திற்கு மாறிய​தாக அந்​தப் பெண் கூறி​னார். இது குறித்து அதி​காரி​கள் வி​சா​ரித்து வருகின்றனர். இவ்​வாறு அந்த அதி​காரி கூறி​னார்​.

<div class="paragraphs"><p><em>கைது செய்யப்பட்ட பெண்</em></p></div>
உ.பி.யில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் முறைகேடு: 300 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in