ஊழியர்​களின் சம்​பளத்தை உயர்த்தாதது ஏன்? - தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

ஊழியர்​களின் சம்​பளத்தை உயர்த்தாதது ஏன்? - தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி கேள்வி
Updated on: 
1 min read

புதுடெல்லி: தொழில் நிறு​வனங்​களின் வரிச் சுமை குறைக்கப்பட்டு உள்​ளது. தனி​நபர் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு அதி​கரிக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் ஊழியர்​களின் சம்​பளத்தை உயர்த்​தாதது ஏன் என்று தொழில​திபர்​களிடம் பிரதமர் நரேந்​திர மோடி கேள்வி எழுப்பி உள்​ளார்.​

இந்​திய வர்த்தக, தொழில் துறை கூட்​டமைப்​பின் (பிக்​கி) பொதுக்​குழு கூட்டம் டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக இளைஞர்​கள், விவ​சா​யிகள் உட்பட அனைத்து தரப்பு மக்​களின் வளர்ச்​சிக்​காக அயராது பாடு​பட்டு வரு​கிறது. இதன் காரண​மாக சர்​வ​தேச அளவில் வேக​மாக வளரும் பொருளாதார நாடாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. உலக வங்கி அண்​மை​யில் ஓர் ஆய்​வறிக்​கை வெளி​யிட்​டது. அதில் இந்தியா​வில் கடந்த 12 ஆண்​டு​களில் 50 கோடி பேர் வறுமை​யில் இருந்து மீண்டு இருப்​ப​தாக புகழாரம் சூட்டி உள்​ளது.

கடந்த 1930-ம் ஆண்​டில் தேசத்​தந்தை மகாத்மா காந்​தி, பிக்கியிடம் சுதேசி இயக்​கத்தை வலுப்​படுத்​துங்​கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதே வேண்​டு​கோளை பிக்​கி​யிடம் இப்போது நான் மீண்​டும் முன்​வைக்​கிறேன். சுய​சார்பு இந்தியாவை உரு​வாக்க பிக்கி உறு​துணை​யாக இருக்க வேண்டும்.

இந்​தி​யா​வில் 140 கோடி மக்​கள் வசிக்​கின்​றனர். இதன்​மூலம் உலகத்​தின் மிகப்​பெரிய சந்​தை​யாக நமது நாடு விளங்​கு​கிறது. இந்த வாய்ப்பை இந்​திய தொழில் நிறு​வனங்​கள் முழு​மை​யாகப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். சர்​வ​தேச தரத்​துக்கு இணையாக உள்​நாட்​டில் பொருட்​களை உற்​பத்தி செய்ய வேண்டும். மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு தொழில் நிறுவனங்களின் வரிச் சுமையை கணிச​மாக குறைத்​திருக்​கிறது.

தனி​நபர்​களின் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் நீங்​கள் (தொழில​திபர்​கள்), ஊழியர்​களின் சம்​பளத்தை உயர்த்​தாதது ஏன்? வரிச்​சுமை குறைக்​கப்​பட்டு இருப்​ப​தால் கூடு​தல் ஊழியர்களை பணி​யில் அமர்த்​தாதது ஏன்? இந்த கேள்வி​களுக்கு நீங்​கள்​தான் பதில் அளிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆலோ​சனை​களை வரவேற்​கிறேன்

பிக்கி கூட்​டத்​தில் பிரதமர் மேலும் பேசும்போது, ‘‘இந்​திய தொழில் நிறு​வனங்​கள் ஆராய்ச்சி மற்​றும் புதுமை கண்​டு​பிடிப்​பு​களுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். நாட்​டின் பொருளா​தா​ரத்தை மேம்​படுத்த பல்​வேறு சீர்திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. பொருளா​தார வளர்ச்சியை மேலும் வேகப்​படுத்த தொழில்துறை​யினரின் ஆக்கப்​பூர்​வ​மான ஆலோ​சனை​களை வரவேற்​கிறேன். இதுதொடர்​பாக எவ்​வித தயக்​க​மும் இன்றி எனக்கு நேரடி​யாக ஆலோ​சனை​களை அனுப்​பலாம்’’ என்றார்​.

ஊழியர்​களின் சம்​பளத்தை உயர்த்தாதது ஏன்? - தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி கேள்வி
ஒடிசாவை நோக்கி நகரும் அக்வான் புயல் - 1 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

X