​18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதலை நடத்​திய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி யார்?

​18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதலை நடத்​திய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி யார்?
Updated on: 
1 min read

மும்பை: கடந்த 2008-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி மும்பை​யின் 10 இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 வெளி​நாட்​டினர் உட்பட 170-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​தனர். 500-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த தாக்​குதலை நடத்​திய 10 தீவிர​வா​தி​களில் 9 பேர் சுட்​டுக் கொல்லப்பட்​டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிர​வாதி மட்​டும் உயிருடன் பிடிபட்​டார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்​பர் 11-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்​றப்​பட்​டது.

முன்​ன​தாக தீவிர​வாதி அஜ்மல் கசாபிடம் நடத்​தப்​பட்ட விசாரணை​யில், பாகிஸ்​தான் ராணுவத்​தின் மேஜர் ஜெனரல் ஒருவர் தங்​களுக்கு பயிற்சி அளித்​த​தாக வாக்​குமூலம் அளித்​தார். இதன் அடிப்​படை​யில் மும்பை தாக்​குதல் வழக்​கில் 20-வது குற்றவாளி​யாக பெயர் தெரி​யாத பாகிஸ்​தான் ராணுவ மூத்த தளபதி சேர்க்​கப்​பட்டு உள்​ளார். பாகிஸ்​தான் ராணுவ​மும், லஷ்கர்-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பும் இணைந்தே மும்பை தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து உள்​ளன. அப்​போது பாகிஸ்​தான் மேஜர் ஜெனரல் ஒரு​வர் சுமார் 8 வாரங்​கள் தீவிர​வா​தி​களுக்கு சிறப்பு பயிற்​சிகளை அளித்து உள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிர​வா​தி​கள் பயிற்சி பெற்ற முகா​முக்கு அந்த மேஜர் ஜெனரல் வந்​துள்​ளார். அப்​போது தீவிர​வா​தி​களிடம் அதிநவீன துப்​பாக்​கி​களை வழங்​கி, குறிப்​பிட்ட இலக்​கு​களை சுடு​வதற்கு அவர் உத்​தர​விட்​டுள்​ளார். பின்​னர் அவர்கள் சுட்ட இலக்​கு​களை மேஜர் ஜெனரல் ஆய்வு செய்துள்ளார். அப்​போது 4-வது இலக்கு முழு​மை​யாக அழிக்கப்பட்டிருப்​பதை பார்த்த அவர், அந்த இலக்கை குறிவைத்து சுட்​டது யார் என்று வினவி உள்​ளார்.

அந்த நபர் அஜ்மல் கசாப் என்று லஷ்கர்-இ-தொய்​பா​வின் மூத்த தளப​தி​கள் கூறினர். இதைத் தொடர்ந்து அஜ்மல் கசாபை முதுகில் தட்​டிக் கொடுத்து ஊக்​கப்​படுத்தி உள்​ளார். அஜ்மல் கசாப் அளித்த வாக்​கு மூலத்​தில் சுட்​டிக் காட்​டிய பாகிஸ்​தான் ராணுவ மேஜர் ஜெனரல் யார் என்​பது இது​வரை தெரிய​வில்​லை.

மும்பை தாக்​குதலின் 18-வது நினை​வு​நாள் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. 18 ஆண்​டு​களாகி​யும் தீவிர​வா​திகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் மேஜர் ஜெனரலை அடை​யாளம் காண முடியவில்லை. இதுகுறித்து மும்பை போலீஸ்

வட்​டாரங்​கள் கூறும்போது, “பாகிஸ்​தான் சர்​வா​தி​காரி முஷாரபுக்கு நெருக்​க​மான மேஜர் ஜெனரல் ஆசிப் அக்​தர் அல்​லது மேஜர் ஜெனரல் நஸ்​ரத் நயீம் தீவிர​வா​தி​களுக்கு பயிற்சி அளித்திருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம். இரு​வரின் இருப்பிடம், விவரங்​களை பாகிஸ்​தான்​ ராணுவம்​ மூடி மறைத்​து வரு​கிறது” என்று தெரிவித்தன.

​18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதலை நடத்​திய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி யார்?
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நவ.30-ல் தொடங்குகிறது: தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்ய திட்டம்

X