மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) கடந்த நவம்​பர் 4-ம் தேதி தொடங்​கியது.

இதன்​படி, இப்​போதைய வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள 7.66 கோடி பேருக்கு எஸ்​ஐஆர் படிவம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களைப் பெறும்பணி கடந்த 11-ம் தேதி முடிவடைந்​தது. பல்​வேறு காரணங்​களால் சுமார் 58 லட்​சம் படிவங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், எஸ்​ஐஆர் நடை​முறை​யின் முதல்​கட்​ட​மாக வரைவு வாக்​காளர் பட்​டியல் தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

இந்த வரைவு பட்​டியலில், இப்​போதைய வாக்​காளர் பட்​டியலில் உள்ள சுமார் 58 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இதற்​கான பட்​டியல் தனி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் சுமார் 24.17 லட்​டம் பேர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக​வும் சுமார் 12.20 லட்​சம் பேர் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​க​வில்லை எனவும் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுத​விர, சுமார் 19.88 லட்​சம் பேரின் முகவரி மாறி உள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதுத​விர, 1.38 லட்​சம் போலி வாக்​காளர்​கள் அல்​லது இரண்டு இடங்​களில் பெயர் இடம்​பெற்​றுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​கள் (பிஎல்​ஓ), வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களு​டன் (பிஎல்ஓ) ஆலோ​சித்​து, எஸ்​ஐஆர் படிவங்​களை தராத வாக்​காளர்​களின் பட்​டியலை தயாரித்​துள்​ளனர். இந்​தப் பட்​டியலில் இடம்​பெறாத வாக்​காளர்​கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து உரிய ஆவணங்​களு​டன் குறிப்​பிட்ட காலத்​துக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு கண்​காணிப்​பாளர் சுப்​ரதா குப்தா கூறும்​போது, “பூர்த்தி செய்து பெறப்​பட்ட எஸ்​ஐஆர் படிவங்​களில் சுமார் 1.34 கோடி படிவங்​களில், தாய், தந்தை பெயர் ஒரே மாதிரி இருப்​பது, வாக்​காளர் மற்​றும் பெற்​றோரின் வயது பொருந்​தாத வகை​யில் இருப்​பது உட்பட பல பிரச்​சினை​கள் உள்​ளன.

இதுகுறித்து ஆய்வு நடத்​தப்​படும். மேலும் 30 லட்​சத்​துக்​கும் அதி​க​மானவர்​களின் பெயர்​கள் 2002-ம் ஆண்டு பட்​டியலுடன் இணைக்​கப்​பட​வில்​லை. இதுபற்​றி​யும் வி​சா​ரணை நடத்​தப்​படும். இப்​பணி​கள் முடிந்த பிறகு இறுதி வாக்​காளர்​ பட்​டியல்​ வெளி​யிடப்​படும்​’’ என்​றார்​.

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
டெல்லியில் கடும் பனி: வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 13 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in