மேற்கு வங்க இறுதிக் கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு

மேற்கு வங்க இறுதிக் கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு இறு​திக் கட்ட தேர்தல் நடை​பெற்று வருகிறது. 142 தொகு​தி​களில் இன்று காலை 7 மணிக்கு வாக்​குப் ​ப​திவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்​குச்​சாவடிகளில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் 2-ம் கட்ட தேர்​தலுக்​கான இறு​திக்​கட்ட பிரச்சாரம் நேற்று முன்​தினம் மாலை 6 மணி​யுடன் முடிவடைந்தது. இந்​நிலை​யில் 142 தொகு​தி​களில் இன்று (ஏப்​.29) வாக்​குப் ​ப​திவு நடை​பெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இங்கு மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23-ம் தேதி முதல் கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. 

இந்​நிலை​யில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் இன்று இறு​திக்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இந்த தொகு​தி​கள் கொல்​கத்தா வடக்​கு, கொல்​கத்தா தெற்​கு, ஹவு​ரா, நாடி​யா, வடக்கு 24 பர்​கா​னாஸ், தெற்கு 24 பர்​கா​னாஸ், ஹூக்ளி மற்​றும் புர்தா பர்​தாமன் ஆகிய 8 மாவட்​டங்​களில் அமைந்​துள்​ளன.

இதனிடையே, இந்த 142 தொகு​தி​களுக்​கான இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று முன்​தினம் மாலை​யுடன் நிறைவு பெற்​றது. இதனால் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜகவைச் சேர்ந்த அரசி​யல் கட்சி தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர். முதல்​வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகு​தி​யான பவானிப்​பூரில் நடை​பயணம் மேற்​கொண்டு மக்​களைச் சந்​தித்​தார். 

பிரதமர் மோடி பிரச்​சா​ரம்: இதே​போல்  பிரதமர் நரேந்​திர மோடி ஜகத்​தால் பகு​தி​யில் ஜிலேபி மத் என்ற இடத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்றி வாக்கு வேட்​டை​யாடி​னார்.

142 தொகு​தி​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. மாநில போலீ​ஸார் மட்​டுமல்​லாமல் துணை ராணுவப் படை​யினரும் பாது​காப்​புப் பணியில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நேற்று காலை முதல் தேர்​தல் அலு​வலர்​கள் தங்​களுக்​குத் தேவையான வாக்​குச்​சாவடி பொருட்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​களு​டன் தங்​களது வாக்​குச்​சாவடிக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடை​வி​டாது வாக்​குப்​ப​திவு நடைபெறும். மேலும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் போலீ​ஸார், துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

3.23 கோடி வாக்​காளர்​கள்:

இந்த இறு​திக் கட்​டத் தேர்​தலில் மொத்​தம் 3.23 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1.64 கோடி பேர் ஆண்​கள், 1.57 கோடி பேர் பெண்​கள். 792 பேர் மூன்​றாம் பாலினத்​தவர்.  தேர்​தலுக்​காக 41,001 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 1,448 வேட்​பாளர்​கள்​ இறுதி​யாக களத்​தில்​ உள்​ளனர்​.

மேற்கு வங்க இறுதிக் கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு
5 மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை வெளியாகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in