கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: மேற்கு வங்க தொழிலாளர்கள் 4 பேர் கைது

கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: மேற்கு வங்க தொழிலாளர்கள் 4 பேர் கைது
Updated on
1 min read

எர்ணாகுளம்: கேரளா​வில் வேலை பார்க்​கும் மேற்கு வங்க தொழிலா​ளர்​கள் மூலம் கேரளா​வுக்​குள் பெரு​மள​வில் போதைப்​ பொருள் கடத்​தப்​படு​வ​தாக மாநில போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதன் அடிப்​படை​யில் எர்​ணாகுளம் மாவட்​டம் வாழக்​குளம் பகுதியில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரி​வினர் மற்​றும் பெரும்​பாவூர் போலீ​ஸார் இணைந்து மேற்கு வங்க தொழிலாளர்கள் வந்த 2 ஆட்​டோக்​களை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் அவர்​கள் தங்​கள் பயணப் பைகளில் சிறிய பாக்கெட்டுகளில் மறைத்து வைத்​திருந்த 35 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்​தனர். இது தொடர்​பாக மேற்கு வங்​கத்தை சேர்ந்த 4 தொழிலா​ளர்​களை கைது செய்​தனர்.

இது குறித்து போலீ​ஸார் கூறுகை​யில், "இந்​தக் கஞ்சா மேற்கு வங்க மாநிலத்​தில் இருந்து ரயில் மூலம் ஆலுவா கொண்டுவரப்பட்​டு, பிறகு ஆட்டோ மூலம் பெரும்​பாவூர் கொண்டுவரப்​பட்​டுள்​ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்​சம் ஆகும்.

பெரும்​பாவூரின் பாய் பஜார் பகு​தி​யில் ஞாயிற்​றுக் ​கிழமை​களில் பெரு​மள​வில் கூடும் புலம்​ பெயர் தொழிலாளர்களுக்கு விநி​யோகிப்​ப​தற்​காக இது கொண்டு வரப்பட்​ட​தாக முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது" என்​றனர்​.

கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: மேற்கு வங்க தொழிலாளர்கள் 4 பேர் கைது
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி: என்டிஏ அரசின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in