மம்தாவை எதிர்த்து போட்டி: பவானிப்பூரில் பிரச்சாரம் தொடங்கினார் சுவேந்து

மம்தாவை எதிர்த்து போட்டி: பவானிப்பூரில் பிரச்சாரம் தொடங்கினார் சுவேந்து
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நேற்று பிரச்சாரம் தொடங்கினார்.

மேற்கு வங்க மாநிலத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்டமாக சட்​டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்​வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதி​காரி களமிறங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில் தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை அவர் பவானிப்​பூரில் நேற்று தொடங்​கி​னார். முன்​ன​தாக சக்​பெரியா சாலை​யில் பாஜக​வின் தேர்​தல் அலு​வல​கத்தை அவர் திறந்​து​வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் பேசி​ய​தாவது: இந்​தத் தேர்தலில் பாஜக மிகப்​பெரிய வெற்றி பெறும். தொண்​டர்​கள் அதிக உற்​சாகத்​துடன் தேர்​தல் பணி​யாற்றி வரு​கின்​றனர். மேற்கு வங்க மக்​கள் என்னை ஏற்​றுக் கொள்​வார்​கள் என்று நம்​பு​கிறேன். இம்​முறை திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சியை ஆட்​சியி​லிருந்து அகற்​று​வோம் என சூளுரைக்​கிறேன். மேற்கு வங்​கம் முழு​வதும் பாஜக​வுக்கு ஆதர​வான அலை வீசுகிறது.

ஊழல் செய்​பவர்​களுக்​கும், ஊடுரு​வல் செய்​பவர்​களுக்​கும் தலைவ​ராக இருப்​பவர்​ (மறை​முக​மாக திரிண​மூல் தலை​வர் அபிஷேக் பானர்​ஜியை குறிப்​பிட்​டார்) இம்​முறை தோற்கடிக்கப்படு​வார். இவ்​வாறு அவர் பேசி​னார். திரிண​மூல் தலை​வர் படு​கொலை மேற்கு வங்​கத்​தின் வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தைச் சேர்ந்த திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மசி​யுர் காஜி (41) நேற்று படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இவர் சம்​பட்லா கிராம பஞ்​சா​யத்​தி​லுள்ள 178 வாக்​குச்​சாவடி​யின் தலை​வ​ராக இருந்​தார் மசி​யுர் காஜி. நேற்று அதி​காலை இவரை யாரோ சிலர், நோப்​பாய் பாட் கெரி பகு​தி​யில் குத்​திக் கொலை செய்து வீசி​விட்​டுச் சென்​றுள்​ளனர். போலீ​ஸார் அவரது உடலைக்​ கைப்​பற்​றி வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

மம்தாவை எதிர்த்து போட்டி: பவானிப்பூரில் பிரச்சாரம் தொடங்கினார் சுவேந்து
கேரளாவின் தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் மனுத் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in