கேரளாவின் தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் மனுத் தாக்கல்

கேரளாவின் தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் மனுத் தாக்கல்
Updated on
1 min read

கண்ணூர்: கேரளா​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெறுகிறது. இதையடுத்து மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் (80) கண்​ணூர் மாவட்​டத்​தில் உள்ள தர்​மடம் தொகு​தி​யில் நேற்று வாகன பேரணி மூலம் பிரச்சாரத்தை தொடங்​கி​னார்.

தலச்​சேரி​யில் உள்ள துணை பதி​வாளர் அலு​வல​கத்​தில் அவர் நேற்று காலை 11 மணி​யள​வில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார். அதில் அவர், தனக்கு ரூ.45 லட்​சம் மதிப்பில் அசை​யும் சொத்​து​களும், ரூ.56 லட்​சம் மதிப்​பில் அசையா சொத்​துகளும் உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். சட்டப்பேரவை தேர்​தலில் 7-வது முறை​யாக போட்​டி​யிடும் முதல்வர் பின​ராயி விஜயன், தர்​மடம் தொகு​தி​யில் தொடர்ந்து 3வது முறை​யாக போட்​டி​யிடு​கிறார்.

இங்கு காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி சார்​பில் அப்​துல் ரசீத்​தும், பாஜக சார்​பில் ரஞ்​சித் என்​பவரும் வேட்பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளனர். பாஜக.​வின் 2-வது பட்​டியல் கேரளா சட்​டப்​பேரவை தேர்​தலில் 47 வேட்​பாளர்​கள் அடங்​கிய முதல் பட்டியலை பாஜக ஏற்​கெனவே வெளி​யிட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் 39 வேட்​பாளர்​கள் அடங்​கிய 2-வது பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. பாஜக முன்​னாள் மாநில தலை​வரும், மிசோரம் மாநில முன்​னாள் ஆளுநரு​மான கும்​மனம் ராஜசேகரன் அரண்​முலா தொகு​தி​யில் வேட்​பாள​ராக நிறுத்தப்பட்டு உள்​ளார்.

கேரளாவின் தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் மனுத் தாக்கல்
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in