மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் மருமகன் அபிஷேக்

முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி

முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி

Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்தை ஆளும் திரிண​மூல் காங்​கிரஸின் (டிஎம்​சி) இளைஞர் பிரிவு தலை​வ​ராக இருப்​பவர் அபிஷேக் பானர்ஜி. மக்​களவை எம்​.பி.​யான இவரை முதல்​வர் மம்தா தனது வாரி​சாக முன்​னிறுத்தி வரு​கிறார். இதனால் கட்​சி​யில் மம்​தாவுக்கு அடுத்த நிலை தலை​வ​ராக அபிஷேக் முன்​னிறுத்​தப்​படு​கிறார்.

இந்​நிலை​யில் 2026 தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் முதல்​வர் மம்​தாவுக்கு இணை​யான தலை​வ​ராக அபிஷேக் உரு​வெடுத்​துள்​ளார். இரு​வரின் ஒருங்​கிணைந்த தலை​மை, மேற்கு வங்க அரசி​யலில் ஒரு தனித்​து​வ​மான அரசி​யல் நிலையை உரு​வாக்​கி​யுள்​ளது. முதல்​வர் மம்​தா​வின் நம்​பிக்​கைக்கு உரிய தளப​தி​யாக அபிஷேக் மாறி வரு​கிறார். இது, மாநில தேர்​தல் அரசி​யலில் மம்தாவின் மருமகன் அபிஷேக்​கின் ஒரு குறிப்​பிடத்​தக்க வளர்ச்​சி​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

சுமார் 34 ஆண்​டு​கள் தொடர்ந்து ஆட்சி செய்த இடது​சாரி கட்​சிகளுக்கு பின் டிஎம்சி ஆட்​சிக்கு வந்​தது. அப்​போது டிஎம்​சி​யில் உறுப்​பின​ரான அபிஷேக், கடந்த 2021 சட்​டப்​பேரவை மற்​றும் மக்​களவை தேர்​தல்​களின் போதும் தீவிரப் பங்கு வகித்​திருந்​தார். இருப்​பினும், தற்​போதைய பிரச்​சா​ரத்​தில் மம்தா - அபிஷேக் இடையே காணப்​படும் ஒருங்​கிணைப்​பின் அளவு இது​வரை இல்​லாத வகை​யில் உள்​ளது.

கடந்த 2014 மக்​கள​வைத் தேர்​தலில் கொல்​கத்​தா​வின் டைமண்ட் ஹார்​பர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​.பி.​யா​னார் அபிஷேக். அப்​போது முதல் அதே தொகு​தி​யில் எம்​.பி.​யாக வென்று வரு​கிறார். இம்​மாநிலத்​தில் பாஜக முக்​கிய எதிர்க்​கட்​சி​யாக படிப்​படி​யாக உரு​வெடுத்​துள்​ளது. இந்த தேர்​தலில் பாஜக தனது அரசி​யல் ஆக்​ரோஷத்தை கடுமை​யாக வெளிப்​படுத்தி வரு​கிறது. இந்த வகை அரசி​யல் கடந்த நான்கு தசாப்​தங்​களாக மேற்கு வங்​கத்​தில் மிக​வும் அரி​தாகவே காணப்​பட்​டது. எனவே, தற்​போதைய சட்​டப்​பேரவை தேர்​தல், டிஎம்சி மற்​றும் பாஜக இடையே கடுமை​யானப்​ போட்​டியை ஏற்​படுத்​தி உள்​ளது.

<div class="paragraphs"><p>முதல்வர் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி</p></div>
மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் கிராமத்துக்கு வருகை தந்த முதல் ஆட்சியர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in