மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி வரை 89.93% வாக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி வரை 89.93% வாக்குப் பதிவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 89.93% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அலிபுர்துவாரில் 88.74% வாக்குகளும், பன்குராவில் 89.91% வாக்குகளும், பிர்பும்-ல் 91.55% வாக்குகளும் பதிவாகி உள்ளன. கூச் பெஹாரில் 92.07%, தெற்கு தினாஜ்பூரில் 93.12%, டார்ஜிலிங்கில் 86.49%, ஜல்பைகுரியில் 91.20%, ஜார்கிராமில் 90.53%, கலிம்போங்-ல் 81.98%, மால்டாவில் 89.56% வாக்குகள் பதிவாகி உள்ளன. முர்ஷிதாபாத்தில் 91.36%, மேற்கு பர்த்துவானில் 86.89%, மேற்கு மிட்னாபூரில் 90.70%, கிழக்கு மிட்னாபூரில் 88.55%, புருலியாவில் 87.35%, வடக்கு தினாஜ்பூரில் 89.74% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்கு வங்கத்தில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகளும் பதிவாகிய நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகி உள்ளன. 3.60 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

ஒரு சில தொகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்.

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று முதற்கட்டமாக 152 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்​ளனர்.

மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாதுகாப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. முதல்முறை வாக்காளர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வாக்கினை செலுத்திவிட்டு அதுகுறித்த செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், பலர் குழுவாகவும் புகைப்படங்களை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில் தேர்தல், வாக்காளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு திருவிழாவாக மாறி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி வரை 89.93% வாக்குப் பதிவு
“15 ஆண்டு கால திரிணமூல் ஆட்சி போதும் என இன்றைய தேர்தலில் மக்கள் தீர்ப்பு...” - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in