மேற்கு வங்கத்தில் ஓட்டுப் போடாதவரின் பெயர் நீக்கப்படும் என்ற அச்சம்: ஊர் திரும்ப ரயில் நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்

மேற்கு வங்கத்தில் ஓட்டுப் போடாதவரின் பெயர் நீக்கப்படும் என்ற அச்சம்: ஊர் திரும்ப ரயில் நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்​ஐஆர்) சுமார் 90 லட்சம் பெயர்​களைத் தேர்​தல் ஆணை​யம் நீக்​கி​யது.

இவற்​றில், கடந்த பிப்​ர​வரி 28 அன்று வெளி​யான இறுதி வாக்​காளர் பட்டியலில் இருந்து நிரந்​தர​மாக சுமார் 63 லட்​சம் பெயர்​கள் நீக்கப்​பட்​டிருந்​தன. எஞ்​சிய 27 லட்​சம் பெயர்​கள், சரி​பார்ப்பு நடைமுறை​கள் நிறைவடைந்த பிறகு நீக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23 மற்​றும் ஏப்​ரல் 29 ஆகிய தேதி​களில் இரு ​கட்​டங்​களாக தேர்​தல் நடைபெறவுள்​ளது. இதில் வாக்​களிக்​காதவர்​களின் பெயர்​கள் நீக்கப்பட்டு விடும் என்ற அச்​சம் பரவலாக எழுந்​துள்​ளது.

இதனால், அம்​மாநிலத்​தின் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் சொந்த ஊர்​களுக்​குத் திரும்​புவது அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, நாட்​டின் பல ரயில் நிலை​யங்​களில் மேற்கு வங்க மாநிலங்களுக்கு செல்​லும் ரயில்​களில் கூட்​டம் அலைமோதுகிறது.

இவர்​கள் தம் சொந்த ஊரின் முதல் ​கட்ட வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்.23-க்கு முன்​ன​தாக வீடு​ திரும்ப முடிவு செய்​துள்​ளனர். இது, ஒரு மிகப்​பெரிய அளவி​லான புலம்​பெயர்வு அலை​யாக தற்போது நிகழ்ந்து வரு​கிறது.

இந்த புலம் ​பெயர்​வின் முக்​கிய மையப்​ புள்​ளி​யாக மால்டா மற்​றும் முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் உருவெடுத்​துள்​ளது. இவர்​களால், வழக்​கத்​திற்கு மாறாகப் பெருமளவு கூட்​டம், சென்​னை, மும்​பை, கேரளா​வின் பல்​வேறு பகுதி​களில் நில​வு​கிறது. இவர்​கள் தம் தொலை​தூர குடியிருப்புகளுக்​காக 36 முதல் 72 மணி நேரம் வரை பயணம் செய்​கின்​றனர்.

இந்த ரயில்​களில் செல்​லும் பயணி​களின் கூற்​றுப்​படி, அவர்​களது அவசரப் பயணத்​திற்​குப் பின்​னால் ஒரு பொது​வான கவலையே காரண​மாக அமைந்​துள்​ளது. அதில், வாக்​குப்​ப​திவு செய்​யத் தவறிவிட்​டால் அம்​மாநில வாக்​காளர் பட்​டியலில் இருந்து தங்​கள் பெயர்​கள் நீக்​கப்​பட்​டு​விடும் என்ற அச்​சம் அவர்​களிடம் எழுந்துள்ளது.

இந்த புலம்​ பெயர் தொழிலா​ளர்​களில் பெரும்​பாலானோர் முஸ்​லிம்​களாக உள்​ளனர். மேலும் இவர்​கள் மேற்கு வங்க மாநில சட்​டப் ​பேர​வைக்​கான பல தொகு​தி​களில் தேர்​தல் முடிவு​களைத் தீர்​மானிப்​ப​தில் ஒரு முக்​கியப் பங்கை வகிப்பவர்கள் என கருதப்​படு​கிறது.

இதனிடையே, வாக்​குப்​ப​தி​விற்கு ஓரிரு நாட்​களே உள்ள நிலையில் வாக்​காளர்​கள் பட்​டியலில் சுமார் ஏழு லட்​சம் பெயர்கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. இவர்​களில், சுமார் 3.22 லட்​சம் பேர் ஏப்​ரல் 23 அன்று வாக்​குப்​ப​திவு தேர்​தலின் முதல் கட்​டத்​தில் வாக்​களிக்க உள்​ளனர்.

எஞ்​சிய சுமார் 3.88 லட்​சம் பேர், ஏப்​ரல் 29 அன்று நடை​பெறும் வாக்​குப்​ப​தி​வின் இரண்​டாம் கட்​டத்​தில் தங்கள் வாக்​கு​களைச் செலுத்த உள்​ளனர். இந்த மொத்த வாக்காளர் விவரங்​கள் விதி​முறை​களுக்கு உட்​பட்டு வெளியிடப்பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

மேற்கு வங்கத்தில் ஓட்டுப் போடாதவரின் பெயர் நீக்கப்படும் என்ற அச்சம்: ஊர் திரும்ப ரயில் நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்
ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in