இந்து கோயில்களை மீட்போம்: யோகி ஆதித்யநாத் உறுதி

இந்து கோயில்களை மீட்போம்: யோகி ஆதித்யநாத் உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் மிகப் பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்யும் வாய்ப்பு எங்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் உ.பி.யில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாங்கள் பல சாதனைகளை செய்துள்ளோம்.

மிக நீண்ட சாதனைப் பட்டியலில் இருந்து ஒன்றை மட்டும் குறிப்பிடுவது சிரமம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது எனது பணியில் ஒரு முக்கியமான தருணம். சர்ச்சை எழுந்துள்ள காசி மற்றும் மதுராவிலும் நாங்கள் இந்து கோயில்களை மீட்க போராடி வருகிறாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து கோயில்களை மீட்போம்: யோகி ஆதித்யநாத் உறுதி
அயோத்தியில் பாபர் மசூதி: ஏப்ரலில் கட்டுமான பணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in