அயோத்தியில் பாபர் மசூதி: ஏப்ரலில் கட்டுமான பணி

தன்னிப்பூரில் கட்டப்பட உள்ள புதிய மசூதியின் மாதிரி படம்.

தன்னிப்பூரில் கட்டப்பட உள்ள புதிய மசூதியின் மாதிரி படம்.

Updated on
1 min read

அயோத்தி: அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பின்படி ராமர் கோயில் கட்டப்பட்டது. அத்துடன் மசூதி கட்டுவதற்கும் அயோத்தியிலேயே இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பின்னர், 2020-ம் ஆண்டில் அயோத்தியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது.

சன்னி மத்திய வக்பு வாரியம், ‘இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை’ (ஐஐசிஎஃப்) என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி மசூதி கட்டும் திட்டத்தைத் தயாரித்தது. இந்நிலையில் அயோத்தியில் மசூதி கட்டும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தலைவர் ஜுபார் பரூக்கி நேற்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தன்னிப்பூரில் கட்டப்பட உள்ள புதிய மசூதியின் மாதிரி படம். </p></div>
கிர்கிஸ்தானில் அடிமைகளாக தவிக்கும் 12 இந்தியர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in