ஜனநாயகம் காக்க போராடுவோம்: சிஜேபி நிறுவனர் அபிஜித் அறிவிப்பு

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே

Updated on: 
1 min read

மும்பை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

போராட்டம் நடத்திய சிஜேபி தொண்டர்கள், மாணவர் அமைப்பினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “போராட்டம் நடத்தியதற்காக எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் மீது இன்னும் வழக்குகளைத் தொடருங்கள். அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே</p></div>
7 ஆயிரம் நயாரா பங்க்குகளில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in