‘இஸ்ரேலில் வழக்கம்போல கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறோம்’ - உ.பி தொழிலாளர்கள் பகிர்வு

இஸ்​ரேலில் பணி​யாற்​றும் ராம் அச்​சல்

இஸ்​ரேலில் பணி​யாற்​றும் ராம் அச்​சல்

Updated on
1 min read

லக்னோ: இஸ்​ரேல் நாட்​டில் வழக்​கம்​போல கட்​டு​மான பணிகளில் ஈடு​பட்டு வரு​கிறோம் என்று உத்தர பிரதேச தொழிலாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இஸ்​ரேல் ராணுவத்தின் அயர்ன் டோம் அமெரிக்க ராணுவத்​தின் தாட் வான் பாது​காப்பு கவசங்​கள் காரண​மாக இஸ்​ரேலில் இயல்பு வாழ்க்கை பெரி​தாக பாதிக்​கப்​பட​வில்​லை. இஸ்​ரேல் நாட்​டின் ஒவ்​வொரு வீட்​டிலும் பதுங்கு அறை​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. ஈரான் ராணுவ ஏவு​கணை​கள், இஸ்​ரேல் எல்​லைக்​குள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்​பப்​படும். அப்​போது மட்​டும் பாதுகாப்பு அறை​களில் மக்​கள் தஞ்​சமடைகின்​றனர்.

இஸ்​ரேல் முழு​வதும் சுமார் 42,000-க்​கும் மேற்​பட்ட இந்​திய தொழிலா​ளர்​கள் பல்​வேறு துறை​களில் பணி​யாற்றி வருகின்றனர். குறிப்​பாக கட்​டு​மானம், விவ​சா​யம், தகவல் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட துறை​களில் அவர்​கள் அதி​க​மாக உள்ளனர். உத்தர பிரதேசத்​தின் பாராபங்​கியை சேர்ந்த சுமார் 25 பேர் இஸ்​ரேலின் டெல் அவிவ் நகரில் கட்​டு​மான தொழிலாளர்களாக பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களில் அங்குர் சிங் என்​பவர் அண்​மை​யில் தனது குடும்​பத்​தினருடன் வீடியோ காலில் பேசி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: இஸ்​ரேலை குறி​வைத்து ஏவுகணைகள் வீசப்​படு​கின்​றன. ஆனால் அவை நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​படு​கின்​றன. நாங்​கள் தனித்​தனி வீடுகளில் வசிக்​கிறோம். ஒரு வீட்​டில் 10 தொழிலா​ளர்​கள் தங்கி உள்​ளோம். தின​மும் காய்​கறி, மளிகை பொருட்​களை வாங்க வழக்​கம்​போல கடைக்​குச் செல்​கிறோம். சிலர் நகரை சுற்​றிப் பார்க்​க​வும் செல்​கின்​றனர். நாள்​தோறும் கட்​டு​மான பணிக்​குச் சென்று வீடு​களுக்கு திரும்​பு​கிறோம். எங்​களது இயல்பு வாழ்க்கை சிறிதளவு​ கூட பாதிக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்​ரேலில் பணி​யாற்​றும் ராம் அச்​சல் உறவினர்​களிடம் வீடியோ காலில் பேசும்​போது, “டெல் அவிவ் நகரில் இருந்து 170 கி.மீ. தொலை​வில் உள்ள நகரில் கட்​டு​மான பணி​யில் ஈடு​பட்டு வருகிறேன். இங்கு வழக்​கம்​போல கட்​டு​மான பணி நடைபெறுகிறது. சைரன் ஒலி கேட்​கும்​போது மட்​டும் பதுங்கு அறை​களுக்கு செல்​வோம். அதன்​ பிறகு தொடர்ந்து கட்​டு​மான பணி​களில் ஈடு​படு​வோம்” என்று தெரி​வித்​தார்.

இஸ்​ரேலில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​களின் உறவினர்​கள் கூறும்​போது, “இஸ்​ரேலை குறி​வைத்து 10 நிமிடங்​களுக்கு ஒரு​முறை ஏவு​கணை வீசப்​படு​கிறது. ஆனால் அவை நடு​வானில் துல்லிய​மாக அழிக்​கப்​ படு​கின்​றன. சைரன் ஒலி கேட்​கும்​போது மட்​டும் இந்​திய தொழிலா​ளர்​கள் பதுங்கு அறை​களில் தஞ்​சம் அடைகின்​றனர். இஸ்​ரேலில் உள்ள எங்​களது உறவினர்​களிடம் தொடர்ந்து வீடியோ காலில் பேசி வரு​கிறோம். அவர்​கள் பாதுகாப்பாக இருந்​தா​லும் எங்​களுக்​கு மனதள​வில்​ அச்​சம்​ நீடிக்கிறது” என்​று தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>இஸ்​ரேலில் பணி​யாற்​றும் ராம் அச்​சல்</p></div>
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in