“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” - ராஜ்நாத் சிங் கருத்து

“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” - ராஜ்நாத் சிங் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: எல்​லைச் சாலைகள் அமைப்​பின் சார்​பில் லடாக், காஷ்மீர், அருணாச்சல், சிக்​கிம், இமாச்சல், உத்​த​ராகண்ட், ராஜஸ்​தான், மேற்​கு​வங்​கம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 125 சாலைகள், பாலங்​கள் ரூ.5,000 கோடி​யில் கட்​டப்​பட்டு உள்​ளன.

டெல்​லி​யில் நேற்று நடந்த விழா​வில் இந்த சாலைகள், பாலங்​களை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் காணொலி வாயி​லாக திறந்​து​ பேசி​ய​தாவது: எல்​லைப் பகு​தி​யான கிழக்கு லடாக்​கில் 920 மீட்​டர் நீளத்​துக்கு ஷியோக் சுரங்​கப்​பாதை கட்​டப்​பட்டு உள்​ளது. இது பொறி​யியல் அதிச​யம் ஆகும். இதன்​மூலம் கடும் பனிப்​பொழி​வு,பனிச்​சரிவு ஏற்​பட்​டாலும் இந்​திய ராணுவ வீரர்​களால் எளி​தில் எல்​லைப் பகு​தியைச் சென்​றடைய முடி​யும்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​தியா நினைத்​திருந்​தால், பாகிஸ்​தானை துவம்​சம் செய்​திருக்க முடி​யும். எனினும் இந்​தியா நிதானத்​தைக் கடைப்​பிடித்​தது. ஒட்​டுமொத்த உலக​மும் இந்​தி​யா​வின் ராணுவ வலிமையைப் பார்த்து வியப்​பில் ஆழ்ந்​தது.

பாது​காப்புத் துறை மட்​டுமன்றி பொருளா​தா​ரத்​தில் இந்​தியா அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. ஒரு காலத்​தில் வெளி​நாடு​களில் இருந்து ஆயுதங்​களை இறக்​குமதி செய்து வந்​தோம். கடந்த 2014-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் ஆயுத உற்​பத்தி ரூ.46,000 கோடி​யாக இருந்​தது. இப்​போது ஆயுத உற்​பத்தி ரூ.1.51 லட்​சம் கோடி​யாக உயர்ந்து உள்​ளது.

10 ஆண்​டு​களுக்கு முன்பு இந்​தி​யா​வின் ஆயுத ஏற்​றுமதி ரூ.1,000 கோடிக்​கும் குறை​வாகவே இருந்​தது. இப்​போது இந்​தி​யா​வின் ஆயுத ஏற்​றுமதி ரூ.24,000 கோடியை எட்​டி​யுள்​ளது. வரும் காலத்​தில் ஆயுத ஏற்​றும​தி​யில் பல்​வேறு சாதனை​கள் படைக்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர்​ ராஜ்​நாத்​ சிங்​ பேசி​னார்​.

“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” - ராஜ்நாத் சிங் கருத்து
அமெரிக்காவில் வேலை அனுமதி காலவரம்பை 18 மாதங்களாக குறைத்தார் அதிபர் ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in