“பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்... ஒரு அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது” - ஒவைசி

“பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்... ஒரு அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது” - ஒவைசி
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யொன்​றில் கலந்து கொண்ட ஏஐஎம்​ஐஎம் கட்​சித் தலை​வர் அசாதுதீன் ஒவைசி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

முகேஷ் அம்​பானி​தான் ‘இந்​தி​யா​வின் நிஜ பாஸா?’ என்று கேள்வி எழுப்​பிய உலகப் பெரும் பணக்​காரர் எலான் மஸ்க்​கின் கருத்து கடும் கண்​டனத்​துக்​குரியது. நாங்​கள் எப்​போதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதி​ரானவர்​கள்​தான். ஆனால் ஒரு வெளிநாட்டவர் (அமெரிக்​கர்) எவ்​வாறு நம் பிரதமரைப் பற்றி இத்தகைய கருத்​துக்​களை எழுத முடி​யும்? நாட்​டின் வளங்​கள் எவ்வாறு பயன்​படுத்​தப்பட வேண்​டும் என்​பதை நமது நாடு​தான் தீர்​மானிக்​கும்.

இந்த வெள்​ளை​யர் எங்​கோ உட்​கார்ந்​து​ கொண்டு நமக்கு உத்​தர​விடு​வா​ரா? ஒரு வெளி​நாட்​டுத் தொழில​திபர் நமது நாட்​டின் முடி​வெடுக்​கும் அதி​காரத்​தைச் சவாலுக்கு உட்​படுத்​தும்​போது, தேசி​ய​வாதம் பற்றி எப்​போதும் பேசும் பாஜக​வும் மோடி அரசும் ஏன் மவுனமாக உள்ளது?

இந்​திய ஊழியர்​கள் மற்​றும் குடிமக்​களின் நலன்​களுக்கே முன்னுரிமை அளிக்​கப்பட வேண்​டும். ஒரு வெளி​நாட்​ட​வரின் நலனுக்​காக இந்​தி​யர்​களின் நலனைப் பலி கொடுக்​கக் கூடாது. சொந்த நாட்​டில் அரசைக் கண்​டிப்​ப​தற்​கும், ஒரு வெளி​நாட்டு தொழில​திபர் நமது நாட்​டுக்கு நிபந்​தனை​களை விதிக்க அனுமதிப்​ப​தற்​கும் நிறைய வித்​தி​யாசம் உள்​ளது. இவ்​வாறு ஒவைசி தெரி​வித்​தார்.

“பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்... ஒரு அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது” - ஒவைசி
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை, 25 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in