மேற்கு ​வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலில் பல இடங்களில் வன்முறை

பாஜக, திரிணமூல் பரஸ்பரம் குற்றச்சாட்டு
மேற்கு ​வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலில் பல இடங்களில் வன்முறை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு ​வங்கத்தில் சட்​டப்​பேரவை தேர்​தல் 2 கட்​டங்​களாக நடை​பெற்​றது. முதல் கட்ட தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடை​பெற்ற நிலை​யில், நேற்று 2-ம் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. சப்​ரா, சாந்​திப்​பூர், நிம்​தாலா மற்​றும் பங்​கர் ஆகிய இடங்​களில் வன்​முறை ஏற்​பட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

வாக்​காளர்​களுக்கு அச்​சுறுத்​தல் விடுக்​கப்​பட்​ட​தாக​வும், வாக்கு இயந்​திரங்​களில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​ட​தால் இந்த வன்​முறை​கள் நடை​பெற்​றது.

முதல்​வர் மம்தா பானர்ஜி தான் போட்​டி​யிடும் பவானிப்​பூர் தொகு​தி​யில் உள்ள வாக்​குச் சாவடி மையங்​களை பார்​வை​யிட்​டார். இங்கு இவரை எதிர்த்து எதிர்க்​கட்சி தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறார்.

வாக்​குச் சாவடிகளில் வன்​முறை சம்​பவங்​கள் குறித்து கருத்து தெரி​வித்த முதல்​வர் மம்தா பானர்ஜி கூறிய​தாவது: தேர்​தல் பார்​வை​யாளர்​கள் வெளி​யிடங்​களில் இருந்து வந்​துள்​ளனர். அவர்​கள் பாஜக​வினர் உத்​தர​வுப்​படி செயல்​படு​கின்​றனர். அனைத்து கட்சி கொடிகளும் அகற்​றப்​பட்​டுள்​ளன. 70-வது வார்டு கவுன்​சிலரை வெளி​யேவர அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை. எங்​கள் கட்சி தொண்​டர்​களை எல்​லாம் பிடித்​துச் சென்று விட்​டனர்.

பாஜக​வினர் வன்​முறை​யில் ஈடு​படு​கின்​றனர். நானும், பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்​ஜி​யும் இரவு முழு​வதும் விழித்​திருந்​தோம். இவ்​வாறு அவர் கூறி​னார். 2-ம் கட்ட தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யினர் வன்​முறை​யில் ஈடு​பட்​ட​தாக பாஜக​வினர் குற்​றம் சாட்​டினர்.

மேற்கு ​வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலில் பல இடங்களில் வன்முறை
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மே.வங்கம், அசாமில் பாஜக அணி வெற்றி பெறும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in