மறைந்த அயத்​துல்லா அலி காமேனி

மறைந்த அயத்​துல்லா அலி காமேனி

காமேனி மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கர்நாடக கிராமம்!

Published on

பெங்களூரு: அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இந்நிலை​யில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்​டு​களில் கர்நாடகா​வுக்கு வருகை புரிந்த படங்​கள் தற்​போது இணையத்தில் வைரலாகி​யுள்​ளன.

அதாவது, அயத்​துல்லா அலி காமேனி கர்​நாடக மாநிலம் சிக்கபள்ளாப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள அலிப்​பூர் என்ற கிராமத்துக்கு 2 முறை வருகை தந்​துள்​ளார். அந்த ஊரில் 30,000-க்கும் அதிக​மான ஷியா முஸ்​லிம்​கள் வாழ்​வ​தால் அவர்​களுக்​காக சிறப்பு தொழுகை நடத்​தி​னார்.

அவர் வந்து சென்ற பின்​னர், ஈரான் அரசின் உதவி​யுடன் அலிப்பூரில் காமேனி பெயரில் மருத்​து​வ​மனை ஒன்று கட்டப்பட்டது. இப்போதும் இயங்கி வரும் இந்த மருத்துவமனையால் அங்குள்ள மக்​கள் பெரிதும் பயனடைகின்றனர். இதன் பிறகு அலிப்​பூரை சேர்ந்​தவர்​களுக்கு ஈரானுடன் நெருங்​கிய தொடர்பு ஏற்​பட்​டது. தற்போது 150 முதல் 200 பேர் வரை ஈரானில் பணியாற்றுகின்றனர்.

இந்​நிலை​யில் காமேனி​யின் மறைவையொட்டி அலிப்​பூரில் மக்கள் கருப்பு உடை அணிந்து ஊர்​வலம் சென்​றனர். இந்த ஊர்வலத்​தின் ​போது அமெரிக்​கா, இஸ்​ரேல் அரசுகளுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர். 3 நாட்​கள் கடைகள் உள்​ளிட்​டவற்றை அடைத்து துக்​கம் அனுசரிப்​ப​தாக​வும் வணி​கர்​கள் அறி​வித்​தனர். அங்​குள்ள ஷியா முஸ்​லிம்​களின் கடைகள், வீடு​கள் ஆகிய​வற்​றில் கருப்​பு கொடி​யும்​ ஏற்​றப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>மறைந்த அயத்​துல்லா அலி காமேனி</p></div>
காமேனி மரணமும் தாக்கமும்: ஈரானில் ஒருபக்கம் துக்கம், மறுபக்கம் கொண்டாட்டம் ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in