ராஜ்பவனில் மாணவர்களுக்கு அசைவம் வழங்கிய சி.பி.ஆர்.

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated on
1 min read

ஸ்ரீநகர்: காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது, ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் ராஞ்சி வந்தபோது ராஜ்பவனுக்கு வருகை தந்தனர். அங்கு அளிக்கப்பட்ட அசைவ விருந்து அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் சைவமாக இருந்தாலும், காஷ்மீர் மாணவர்கள் பெரும்பாலானோர் அசைவம் என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு அசைவ உணவு வழங்கும்படி ராஜ்பவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

நாம் ஜனநாயகவாதிகள். அடுத்தவர்களின் உணர்வுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

<div class="paragraphs"><p>குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்</p></div>
மேற்கு வங்க எஸ்ஐஆர் பணி: புதிய மனு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in