கேரள மாநிலத்​தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு

கேரள மாநிலத்​தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: கேரள காங்கிரஸ் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் தலை​வ​ராக வி.டி.சதீஷன் நியமிக்​கப்​படு​வ​தாக காங்​கிரஸ் மேலிடம் அறி​வித்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக வி.டி.சதீஷன் விரை​வில் பொறுப்பேற்கவுள்ளார்.

கேரளா​வில் கடந்த ஏப்​ரல் 20-ம் தேதி சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. இதையடுத்து தேர்​தல் முடிவு​கள் கடந்த 4-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டன. மொத்​த​முள்ள 140 தொகு​தி​களில், காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎஃப்) 102 இடங்​களைக் கைப்​பற்றி ஆட்சி அமைக்​கும் தகு​தி​யைப் பெற்​றது. இதையடுத்​து, கேரளா​வின் அடுத்த முதல்​வரை தேர்வு செய்​வதற்​கான முயற்​சிகளை காங்​கிரஸ் கட்சி தீவிரப்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிட பார்​வை​யாளர்​களான அஜய் மக்​கான் மற்​றும் முகுல் வாஸ்​னிக் ஆகியோர் கடந்த 7-ம் தேதி திரு​வனந்​த​புரத்​தில் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களின் கூட்​டத்​தைக் கூட்டி விரி​வான ஆலோ​சனை நடத்​தினர். இதனிடையே முதல்​வர் பதவியைப் பெறு​வதற்கு கட்​சி​யின் மூத்த தலை​வரும், சட்​டப் பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த வி.டி.சதீஷன், கட்​சி​யின் மூத்த தலை​வர் ரமேஷ் சென்​னிதலா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்​தது.

மேலும் கட்​சி​யின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோ​பால் பெயரும், முதல்​வர் பதவி விவ​காரத்​தில் அடிபட்​டது. இந்​நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக அதாவது முதல்​வ​ராக யாரை தேர்ந்​தெடுப்​பது என்​பது குறித்து ஒவ்​வொரு எம்​எல்​ஏக்​களிட​மும் தனித்​தனியே கருத்​துகளை காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் அஜய் மக்​கான், முகுல் வாஸ்​னிக் ஆகியோர் கேட்​டறிந்​தனர்.

இதையடுத்​து, இந்த கூட்​டத்​தில் காங்​கிரஸ் சட்​டப்​பேர​வைத் தலை​வரை தேர்வு செய்​வதற்​கான முழு அதி​காரத்​தை​யும் காங்​கிரஸ் தலை​மைக்கு அளிக்​கும் ஒரு​வரி தீர்​மானம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது. முதல்வரை தேர்ந்தெடுப் பதில் கடந்த 10 ந ாட்களாக இழுபறி நிலவி வந்​தது. இந்​நிலை​யில், வி.டி. சதீஷன், கேரள காங்​கிரஸ் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நேற்று தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இதையடுத்​து, விரை​வில் அவரது தலை​மை​யில் கேரளா​வில் கூட்​டணி ஆட்சி அமைக்​கப்பட உள்​ளது. இதனால் வி.டி.சதீஷன் ஆதர​வாளர்​கள் உற்​சாகத்​தில் உள்​ளனர்.

இத்தகவலை காங்​கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய​ராம் ரமேஷ், அஜய் மக்​கான், முகுல் வாஸ்​னிக், தீபா தாஸ் முன்ஷி ஆகியோர் டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​து அறிவித்தனர். 18-ல் பதவியேற்பு இதைத் தொடர்ந்​து, வரும் 18-ம் தேதி கேரளா​வின் புதிய முதல்​வ​ராக வி.டி. சதீஷன் பதவி​யேற்க உள்​ளார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று காங்​கிரஸ் மேலிட வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

கேரள மாநிலத்​தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in