பிரதமர் நரேந்திர மோடி தொகுதியில் தமிழர் விஜயேந்திர பாண்டியன் நியமனம்

வாராணசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் கான்பூருக்கு மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தொகுதியில் தமிழர் விஜயேந்திர பாண்டியன் நியமனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் எம்​.பி. தொகு​தி​யான வாராணசி​யின் மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்கம், கான்பூருக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். கான்​பூரிலிருந்த மற்​றொரு தமிழ​ரான கே.​விஜயேந்திர பாண்டியன் புதிய மண்டல ஆணையராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

உத்தர பிரதேசத்​தின் 2009-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதி​காரி எஸ்​.​ராஜலிங்​கம். தென்​காசி​யின் கடையநல்​லூரைச் சேர்ந்த இவர், பிரதமர் நரேந்​திர மோடி​யின் எம்​.பி. தொகு​தி​யான வாராணசியில் நவம்​பர் 2022​முதல் ஏப்​ரல், 2025 வரை ஆட்​சி​ய​ராக பதவி வகித்​தார். இதையடுத்து அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது.

இருப்​பினும், அதே வாராணசி மண்​டலத்​தின் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டார். அங்கு பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதே இதற்கு காரணம். வாராணசி மண்டல ஆணையர், அங்​குள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில் நிர்​வாகக் குழுவின் தலை​வ​ராக​வும் இருப்​பார். அந்த வகை​யில் காசி விஸ்வநாதர் கோயி​லிலும் வளர்ச்சி திட்​டங்​களை அமல்படுத்தினார்.

பிரதமர் மோடிக்கு உள்ள தமிழ் மீதான ஆர்​வத்தால் வாராணசியில் நவம்​பர் 2022-ல் காசி தமிழ் சங்​கமம் தொடங்கப்பட்​டது. அதன் பிறகு தொடர்ந்து 4 சங்​கமங்​களை​யும் அதி​காரி ராஜலிங்​கம் பொறுப்​பேற்று நடத்தி இருந்​தார். இந்நிலையில், ராஜலிங்​கம் உ.பி.​யின் முக்​கி​யத் தொழில் நகரமான கான்​பூரின் மண்டல ஆணை​ய​ராக மாற்றப்பட்டுள்ளார்.

கான்​பூரிலிருந்த மற்​றொரு தமிழ​ரான மண்டல ஆணை​யர் கே.​விஜயேந்​திர பாண்​டியன், வாராணசிக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். அவரிடம் ஏற்​கெனவே கூடு​தலாக 17 பொறுப்​பு​கள் உள்​ளன. முதல்வர் யோகி ஆதித்​ய​நாத்​தின் அபி​மானம் பெற்​றவ​ராகக் கருதப்​படும் பாண்​டியன், தற்​போது பிரதமர் தொகு​தி​யின் பணியிலும் பாராட்​டு​களைப் பெறு​வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ல் ஐஏஎஸ் அதி​காரி​யாகி, உ.பி. மாநிலப் பிரி​வில் பணி​யாற்​றும் பாண்​டியன் சிவகங்​கை​யைச் சேர்ந்​தவர். இவரது தந்தை எஸ்​.கற்​பூர சுந்தர பாண்​டியன் தமிழகத்​தில் ஓய்​வு​பெற்ற நீதிப​தி.

உ.பி.​யின் மேலும் 2 ஐஏஎஸ் மற்​றும் ஒரு ஐபிஎஸ் தமிழர்​களும் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில், ஜோன்​பூர் ஆட்​சி​ய​ரான சென்​னையைச் சேர்ந்த என்​.​சா​முவேல் பால், கூட்​டுறவு சங்கங்களின் கூடு​தல் ஆணை​யர் மற்​றும் பதி​வாள​ராகி உள்ளார். அருப்​புக்​கோட்​டையைச் சேர்ந்த டாக்​டர்​.ஆர்​.​ராஜகணப​தி, சீதாபூர் ஆட்​சி​யர் பணியி​லிருந்​து, உ.பி. நகர்ப்​புற வேலை​வாய்ப்பு மற்​றும் வறுமை ஒழிப்​புத் துறை​யின் இயக்​குந​ராக நியமிக்கப்பட்டுள்​ளார்.

முரா​தா​பாத் டிஐஜி​யான ஜி.​முனி​ராஜ், பரேலி​யின் டிஐஜி​யாக மாற்றப்​பட்​டுள்​ளார். தர்​மபுரி​யின் அக்​ரஹாரப் பாப்​பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இவர், ஏற்​கெனவே பரேலி மாவட்டத்தில் எஸ்​எஸ்​பி​யாக இருந்​தார். அப்​போது (2017-ல்) மதநல்லிணத்​துக்கு தடை​யாக இருந்​த​தாக ஆளும் பாஜக எம்​எல்ஏ உள்​ளிட்ட சிலர் மீதும் முனி​ராஜ் வழக்கு பதிவு செய்​திருந்​தார். இதனால், அவர்​ ‘உபி சிங்​கம்​’ என அழைக்​கப்​படுகிறார்​.

பிரதமர் நரேந்திர மோடி தொகுதியில் தமிழர் விஜயேந்திர பாண்டியன் நியமனம்
வங்கக் கடலில் நிலைகொண்ட ‘அக்வான்’ புயல் தீவிரமாகிறது

X