“வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” - பிறந்த நாளில் சோனியா காந்தி பகிர்வு

சோனியா காந்தி | கோப்புப் படம்

சோனியா காந்தி | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: பிறந்த நாளையொட்டி என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...’ என சோனியா காந்தி பதில் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 79-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு தலைவர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடிய அவர், தைரியம், தியாகம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு கருணையின் அடையாளமாக திகழ்கிறார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் அவரது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தியிடம் பிறந்த நாளை முன்னிட்டு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சோனியா காந்தி, “வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” என குறிப்பிட்டார்.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு அது குறித்த விவாதம் நேற்று மக்களவையிலும், இன்று மாநிலங்களவையிலும் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அரசை விமர்சித்து பேசி இருந்தனர். இந்நிலையில், சோனியா காந்தி தனது பிறந்த நாள் செய்தியாக, “வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சோனியா காந்தி | கோப்புப் படம்</p></div>
“வாக்கு திருட்டுதான் மிகப் பெரிய தேச விரோத செயல்” - மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in