குடியரசுத் தலைவரை அரசியல் சண்டைக்கு இழுப்பதா? - ராகுலுக்கு பாஜக மூத்த தலைவர் கண்டனம்

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா

Updated on: 
1 min read

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அக்குழு சமர்ப்பித்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு, வாக்குத் திருட்டு குறித்த தங்கள் குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவர் மறுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என ராகுல் தெரிவித்தார். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா நேற்று கூறியதாவது:

திறமையற்ற தலைவர் ஒருவர், தங்கள் குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவர் மறுக்கவில்லை எனக் கூறுகிறார். இதன்மூலம் அவர் குடியரசுத் தலைவரை அரசியல் வீதிச் சண்டைக்கு இழுக்க முயல்கிறார்.

ராகுல் காந்திக்கு அடிப்படை நெறிமுறைகள் கூடப் புரியவில்லை. குடியரசுத் தலைவரை சந்திக்கும் ஒரு குழு, ஒரு மனுவை வழங்கினால் அதை அவர் ஏற்றுக்கொள்வதுதான் அடிப்படை நெறிமுறை. ஆனால் ராகுல் அதை ஒரு நாடகமாக மாற்றிவிட்டார்.

சுமார் ஒரு ஆண்டாக தேர்தல் முறைகேடுகள் குறித்து குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரிடம் ஏன் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

ஆதாரங்களை பின்னர் சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்றால், ஆதாரம் இல்லாமல் அங்கு ஏன் சென்றீர்கள்? நாட்டின் உயர் பதவியை வகிக்கும் அளவுக்கு ராகுல் காந்தி பொறுப்புள்ளவராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா</p></div>
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ‘நார்வேக்கு அழியாத களங்கம்’ என ட்ரம்ப் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in