உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்ய நாத்தே முதல்வர் வேட்பாளர்: பாஜக தலைவர் நிதின் நவீன் அறிவிப்பு

உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்ய நாத்தே முதல்வர் வேட்பாளர்: பாஜக தலைவர் நிதின் நவீன் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்​தில் தேர்​தல் நடைபெற உள்​ளது. இதற்​காக உ.பி.​யின் மேற்​குப் பகு​தி​யில் உள்ள தாத்​ரி​யில் எதிர்க்​கட்​சி​யான சமாஜ்​வா​தி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்கி விட்​டது.

பாஜக​வும் முதல்​வர் வேட்​பாளரைத் தேர்வு செய்​து​விட்​டது. இதனால் உ.பி. தேர்​தல் களம் சூடு​பிடித்​து​விட்​டது. இது குறித்து பாஜக தலை​வர் நிதின் நவீன் இந்தி தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உ.பி. முதல்​வ​ராக யோகி ஆதித்​ய​நாத் பதவி வகிக்​கிறார். அவரது தலை​மை​யின் கீழ்​தான் மாநில அரசு சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறது.

2027 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் யோகி ஆதித்​ய​ நாத்தே பாஜக முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​படு​வார். மாநிலத்​தில் தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடிப்​போம். ஒரு காலத்தில் மிரட்​டிப் பணம் பறித்​தல், குற்​றச் செயல்​களுக்​குப் பெயர் பெற்​றிருந்​தது உ.பி. இப்​போது சிறந்த சட்​டம், ஒழுங்கு மற்றும் அதிவேக நெடுஞ்​சாலைகளுக்​குப் பெயர் பெற்ற மாநிலமாகத் திகழ்​கிறது. இவ்​வாறு நிதின் நவீன் கூறி​யுள்​ளார்.

உ.பி.​யில் கடந்த 2017-ல் பாஜக முதல் முறை​யாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்​தது. துணை முதல்​வ​ராக கேசவ் பிர​சாத் மவுரியா பதவி​யேற்​றார். முதல்​வ​ராகும் கனவில் இருந்து வரு​கிறார். இந்​நிலை​யில், மீண்​டும் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வர் வேட்​பாளர் என்று பாஜக அறி​வித்​துள்​ள​தால் கேசவ் பிர​சாத் ஏமாற்​றம் அடைந்​துள்​ளார்.

முன்​ன​தாக உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் மத்​திய அமைச்​ச​ரா​வார். பிரதமர் மோடிக்​குப் பிறகு அப்​ப​தவிக்கு ஆதித்​ய​நாத் தேர்வு செய்யப்​படு​வார் என தகவல்​கள் வெளி​யா​யின. அப்​போது​தான் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆதித்​ய​நாத் சந்​திப்பு நடந்தது. இந்​தச் சூழலில் நிதின் நவீன் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு மிக முக்​கிய​மான​தாகக்​ கருதப்​படுகிறது.

உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்ய நாத்தே முதல்வர் வேட்பாளர்: பாஜக தலைவர் நிதின் நவீன் அறிவிப்பு
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்: மும்பையை துவம்சம் செய்த சிஎஸ்கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in