பனாரஸ் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட ஜோதிடப் பிரிவு: ஜாதகம், நல்லநேரம் உள்ளிட்ட 8 வகை சேவைகள் தொடக்கம்

பனாரஸ் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட ஜோதிடப் பிரிவு: ஜாதகம், நல்லநேரம் உள்ளிட்ட 8 வகை சேவைகள் தொடக்கம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாராணசி​யின் பழம்​பெரும் கல்​விநிலை​ய​மாக இருப்​பது பனராஸ் இந்து பல்​கலைகழகம் (பிஎச்​யு). இங்கு ஜோதிடக் கல்​வித்​துறை சுமார் 4 வருடங்​களுக்கு முன் தொடங்​கப்​பட்​டது. சம்ஸ்​கிருத வித்யா தர்ம விஞ்​ஞானப் புலத்​தின் கீழ் செயல்​படும் இத்​துறை​யில் மாணவர்​களுக்கு ஜோதிடப் பட்​டத்​திற்​கான கல்வி போதிக்​கப்​படு​கிறது. இதன் அங்​க​மாக, தற்​போது மேம்​படுத்​தப்​பட்ட ஜோதிடப்​பிரி​வும் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இந்தப் பிரிவு இப்​போது சிறப்​புச் சேவை​களை வழங்​கும் வகை​யில் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதில், ஜாதகம் பார்ப்​பது முதல் சடங்​கு​கள் வரை 8 வகை​யான சேவை​கள் வெளிநபர்​களுக்கு ஒரே இடத்​தில் கிடைக்​க​வுள்​ளன. ஜோதிடத் துறை​யின் ‘பஞ்​சாங்​கப் பிரிவு’ அலு​வல​கத்​தில், இதற்​கென பிரத்​யேக​மான குளிரூட்​டப்​பட்ட அலு​வல​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பிரி​வின் ஒருங்​கிணைப்​பாள​ராக பேராசிரியர் வினய் பாண்டே அமர்த்​தப்​பட்​டுள்​ளார். ஜாதகம், நல்ல நாட்​கள், திரு​மணப் பொருத்​தம், வாஸ்து அடிப்​படையி​லான நிலத் திட்​டம், மண் மேம்​பாடு, ரத்​தினக் கற்​கள் மற்​றும் சடங்​கு​கள் குறித்த தகவல்​களைத் தேடும் மக்​களுக்​குத் தேவை​யான ஆலோ​சனை​கள் மற்​றும் தீர்​வு​கள் இங்கு வழங்​கப்​படு​கின்​றன.

சடங்​கு​கள் தொடர்​பான ஆலோ​சனைக்கு ரூ.250, நல்ல நேரம் அறிய ரூ.100, பேராசிரிய​ராக உள்ள ஜோதிடரை மாவட்​டத்​திற்கு வெளியே அழைத்​துச் செல்ல ரூ.21,000, மாவட்​டத்​திற்​குள் அழைத்​துச் செல்ல ரூ.11,000 கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னச் செல​வு​களைத் தனி​யாகச் செலுத்த வேண்​டும். இந்​தக் கட்​ட​ணத்​தில் 50% ‘தட்​சணை’ (கவுரவ ஊதி​யம்) அடங்​கும்.

இதுகுறித்து பிஎச்​யு​வின் ஜோதிடக் கல்​வித்​துறை​யின் தலை​வர் பேராசிரியர் சத்​ரு​கன் திரி​பாதி கூறுகை​யில், ‘ஒவ்​வொரு நபரும் தங்​கள் பிரச்​சினைக்​கான தீர்​வைக் காண வரு​வ​தால், இத்​தகைய சிறப்பு ஆலோ​சனை மக்​களுக்​குப் பயனுள்​ள​தாக இருக்​கும்.

ஜன்ம குண்​டலி (பிறப்பு ஜாதகம்), வர்ஷ குண்​டலி (வரு​டாந்​திர ஜாதகம்) மற்​றும் பிரஷ்ன குண்​டலி (கேள்விக்​கான ஜாதகம்) ஆகிய​வற்​றின் மூலம் எதிர்​காலத்​தைத் தெரிந்​து​கொள்​ளலாம். இதற்​கான கட்​ட​ணத்​தில் 50% ஜோதிடருக்கு தட்​சணை​யாக வழங்​கப்​படும். மீத​முள்ள தொகை துறை மற்​றும் பிற செல​வு​களுக்​காக ஒதுக்​கப்​படும்" என்​றார்.

பனாரஸ் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட ஜோதிடப் பிரிவு: ஜாதகம், நல்லநேரம் உள்ளிட்ட 8 வகை சேவைகள் தொடக்கம்
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in