உ.பி. எஸ்எஸ்ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 லட்​சம் வாக்காளர்கள் சேர்ப்பு

உ.பி. எஸ்எஸ்ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 லட்​சம் வாக்காளர்கள் சேர்ப்பு
Updated on: 
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா இதனை வெளியிட்டார்.

லக்​னோ​வில் நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் பேசிய அவர், “எஸ்​எஸ்​ஆர் 2027-ன் கீழ் உள்ள வரைவு வாக்​காளர் பட்டியலில் 13 கோடியே 58 லட்​சத்து 68 ஆயிரத்து 905 வாக்காளர்கள் உள்​ளனர். எஸ்​ஐஆர்​-க்கு பிறகு ஏப்​ரல் 10-ல் இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​ட​திலிருந்​து, இந்த வரைவுப்பட்​டியலில் கிட்​டத்​தட்ட 11 லட்​சம் பெண்​கள் உட்பட 18 லட்​சம் வாக்காளர்​கள் கூடு​தலாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்” என்றார்.

மேலும், “உரிமை கோரல்​கள் மற்​றும் ஆட்​சேபனை​களுக்​கான காலக்​கெடு நவம்​பர் 17 முதல் டிசம்​பர் 16 வரை திறந்திருக்​கும். இந்​தக் கால​கட்​டத்​தில், தகு​தி​யுள்ள குடிமக்​கள் வாக்​காளர் பட்டியலில் உள்ள பதிவு​களைச் சேர்க்க, நீக்க அல்​லது திருத்துவதற்கு முறையே படிவங்​கள் 6, 7 மற்​றும் 8 மூலம் விண்ணப்​பிக்​கலாம்” எ்ன்றார். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் எஸ்ஐஆரில் விடுபட்டவர்களும் அடங்கும்.

உ.பி. எஸ்எஸ்ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 லட்​சம் வாக்காளர்கள் சேர்ப்பு
தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

X