தாஜ்மகாலா, தேஜோ மகாலயாவா? - ஆக்ராவில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு

மத்திய அரசு, ஏஎஸ்ஐ-க்கு உ.பி. உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தாஜ்மகாலா, தேஜோ மகாலயாவா? - ஆக்ராவில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆக்​ரா​வில் தாஜ்ம​கால் வளாகத்​தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்​கில் மத்​திய அரசு மற்​றும் ஏஎஸ்​ஐ-க்கு அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

உ.பி.​யின் ஆக்​ரா​வில் உலகின் 7-வது அதிசய​மாக கருதப்​படும் தாஜ்மகால் உள்​ளது. இது முகலாய மன்​னர் ஷாஜஹா​னால் 1563-ல் கட்டி முடிக்​கப்​பட்​டது. இது அங்​கிருந்த ஒரு கோயிலை இடித்​து​விட்டு கட்​டப்​பட்​ட​தாக அவ்​வப்​போது சர்ச்​சைகள் எழுகின்​றன.

தற்​போது உ.பி.​யின் பகவான் ஸ்ரீ அக்​ரேஷ்வர் மஹாதேவ் நாக​நாதேஷ்வர் விராஜ்​மான் தேஜோ மகாலயா கோயில் நிர்​வாகி​கள் சார்​பில் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்​ளது.

இதில், “தேஜோ மகாலயா என்ற பெயரில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு தாஜ்ம​கால் கட்​டப்​பட்​டுள்​ளது. எனவே அங்கு அகழாய்வு நடத்த அரசு ஆணை​யர் நியமிக்க வேண்​டும்” என்று கோரப்​பட்​டுள்​ளது.

இம்​மனுவை விசா​ரணைக்கு ஏற்​றுக் கொண்ட உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் அமர்​வு, மத்​திய அரசு மற்​றும் அதன் கீழ் செயல்​படும் இந்​தி​யத் தொல்​லியல் துறை (ஏஎஸ்ஐ) விளக்​கம் அளிக்க வேண்டும் என நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

இதற்கு முன் இந்த மனு, ஆக்ரா மாவட்ட நீதி​மன்​றத்​தில் அளிக்கப்பட்​டிருந்​தது. இதற்கு ஆதா​ரமில்லை எனக் கூறி அம்​மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. கடைசி​யாக கடந்த மே 2022-ல் தாஜ்மகால் மீது ஒரு வழக்கு தொடுக்​கப்​பட்​டிருந்​தது. இதில், தாஜின் அடித்​தளத்​தில் சுமார் 22 அறை​கள் பூட்​டிக் கிடப்பதாகவும், அதில் இந்து கடவுள்​களின் சிலைகள் இருப்பதாகவும் சந்​தேகம் கிளப்​பப்​பட்​டது. ஆனால் தாஜின் அடித் தளத்​தில் அறை​கள் எது​வும் இல்லை என்று கூறி இந்த வழக்​கும் தள்​ளு​படி​யானது.

இதற்கு ஆக்​ரா​வில் ஏஎஸ்ஐ கண்​காணிப்​பாள​ராகப் பணி​யாற்​றிய தொல்​பொருள் ஆய்​வாள​ரான டி.த​யாளன் எனும் தமிழர் எழு​திய ‘Tajmahal and its Conservation’ என்ற நூல் ஆதா​ர​மானது. ஆக்ரா மண்​டலக் கண்​காணிப்​பாள​ராக 2003 முதல் 2007 வரை தாஜ்ம​காலை நிர்​வகித்த தயாளன் தனது ஆய்​வில் தாஜ்ம​காலின், அடித்​தளத்​தில் பெரிய அளவு​களிலான நில​வறை மட்​டுமே அமைந்​துள்​ளதே தவிர அறை​கள் இல்லை எனக் குறிப்​பிட்​டிருந்​தார்.

தற்​போதைய வழக்கு குறித்து மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர்​கள் கூறுகை​யில், “இந்த வழக்​கில் கடந்த 2015-ல் ஒரு வழக்கு தொடரப்பட்​டது. இந்த வழக்கு ஆக்ரா சிவில் நீதிபதி முன்னிலையில் நிலு​வை​யில் உள்​ளது. வளாகத்​திற்​குள் ஒரு கோயில் இருப்​பதை உறுதி செய்​யு​மாறு இவ்​வழக்கு கோரு​கிறது. இவ்​வழக்கு பல ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்ள நிலை​யில், தாஜ்ம​காலை ஆய்வு செய்ய வழக்​கறிஞர் ஆணை​யர் நியமிக்கக்கோரி கூடு​தல் மாவட்ட நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த வழக்கு இப்​போது உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது” என்​றனர்​.

தாஜ்மகாலா, தேஜோ மகாலயாவா? - ஆக்ராவில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு
உத்தரப் பிரதேசம் உண்மையிலே வருவாய் உபரி மாநிலமா? - தரவுகளும், சில தகவல்களும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in