மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உ.பி. பாஜக தலைவரானார்

மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உ.பி. பாஜக தலைவரானார்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச மாநில பாஜக தலை​வர் பதவிக்கு மத்​திய நிதித் துறை இணை​யமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி நேற்று முன்​தினம் மனு தாக்​கல் செய்​தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்​கல் செய்​ய​வில்​லை.

இந்​நிலை​யில், லக்​னோ​வில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில், கட்​சி​யின் மத்​திய தேர்​தல் அதி​காரி​யும் மத்​திய அமைச்​சரு​மான பியூஷ் கோயல் நேற்று கூறும்​போது, “உத்தர பிரதேச பாஜக தலை​வ​ராக மத்​திய இணை​யமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி ஒரு​மன​தாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதை அறி​விப்​ப​தில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்​றார்.

இதையடுத்து பங்​கஜ் சவுத்​ரிக்கு அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், துணை முதல்​வர்​கள் கேசவ் பிர​சாத் மவுரியா மற்​றும் பிரஜேஷ் பதக் மற்​றும் அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

இது​வரை இப்​ப​த​வி​யில் இருந்த பூபேந்​திர சவுத்ரி கட்​சிக் கொடியை பங்​கஜ் சவுத்​ரி​யிடம் வழங்கி வாழ்த்து தெரி​வித்​தார். பங்​கஜ் சவுத்ரி தற்​போது கிழக்கு உத்தர பிரதேசத்​தின் மஹா​ராஜ் கஞ்ச் மக்​கள​வைத் தொகுதி எம்​.பி.​யாக (7-வது முறை) உள்​ளார்​.

மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உ.பி. பாஜக தலைவரானார்
இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் கீழடி அகழாய்வு பற்றிய நூல் 23-ல் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in