இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் கீழடி அகழாய்வு பற்றிய நூல் 23-ல் வெளியீடு

இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் கீழடி அகழாய்வு பற்றிய நூல் 23-ல் வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் தோற்​றம் குறித்து ஆரா​யும் சவுமியா அசோக் எழு​திய கீழடி அகழாய்வு பற்​றிய நூல் விரை​வில் வெளி​யாக உள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த பத்​திரி​கை​யாள​ரும் அறி​முக எழுத்​தாள​ரு​மான சவுமியா அசோக், ‘தி டிக்: கீழடி அண்ட் தி பாலிடிக்ஸ் ஆப் இந்​தி​யா'ஸ் பாஸ்ட்' என்ற தலைப்​பிலான புதிய நூலை எழுதி உள்​ளார். இதை ஹேசெட் இந்​தியா பதிப்​பகம் வரும் 23-ம் தேதி வெளி​யிட உள்​ளது. இந்த நூல் இந்​தி​யா​வின் தோற்​றம் குறித்த நீண்​ட​கால விவாதங்​களை ஆழமாக ஆராய்​வ​தாகக் கூறப்​படு​கிறது.

தமிழகத்​தின் கீழடி கடந்த 2014-ம் ஆண்டு கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அங்கு அகழாய்வு நடை​பெற்று வரு​கிறது. இது இந்​தி​யா​வின் மிக​வும் சர்ச்​சைக்​குரிய அகழ்​வா​ராய்ச்​சிகளில் ஒன்​றாக மாறி​யுள்​ளது. ஏனெனில், இது, தென்​னிந்​தி​யா​வில் ஒரு நகர நாகரி​கம் இருந்​ததற்​கான ஆதா​ரம் என்று ஒரு சாரா​ரால் போற்​றப்​படு​கிறது. ஆனால், இது அரசி​யல் கட்​டுக்​கதை என்று ஒரு சிலர் நிராகரிக்​கின்​றனர்.

இந்த நூல், கூர்​மை​யான நுண்​ணறிவை நகைச்​சுவை​யுடன் கலந்​து, அறி​வியல் மற்​றும் வரலாறு குறித்த அரசி​யல் சண்​டைகள் எவ்​வாறு இந்​தி​யா​வின் கடந்த காலத்​தைப் பற்​றிய நமது புரிதலைத் தொடர்ந்து வடிவ​மைக்​கின்றன என்​பதை விளக்​கு​கிறது.

இதுகுறித்து சவுமியா கூறும்​போது, "கீழடி அகழாய்​வு, தமிழ் மக்​களிடையே எவ்​வளவு ஆழமாக எதிரொலித்​தது என்​ப​தை​யும், மேலும் வளர்ந்து வரும் ஒரு​மைப்​படுத்​தும் முயற்​சிகளுக்கு மத்​தி​யில் நாட்​டின் பன்​முகத்​தன்​மை​யைப் பாது​காப்​ப​தற்​கான ஒரு சின்​ன​மாக அது எவ்​வாறு மாறியது என்​ப​தை​யும் கண்டு ஈர்க்​கப்​பட்​டேன்.

நம்​முடைய தோற்​றம் குறித்த கதைகள் நாம் கற்​பனை செய்​வதை​விட மிக​வும் சிக்​கலானவை என்​பதை எனது நூல் ஆராய்​கிறது. நாட்​டின் பல தரப்​பட்ட மக்​களின் குரல்​கள் மூலம், அந்​தச் சிக்​கலான தன்​மையை வெளிப்​படுத்த நான் முயன்​றுள்​ளேன். இது ஒரு எளி​தான வாசிப்பு அனுபவ​மாக இருக்​கும். இதில் எனது நகைச்​சுவையை​யும் சற்று கலந்​திருக்​கிறேன்​" என்​றார்​.

இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் கீழடி அகழாய்வு பற்றிய நூல் 23-ல் வெளியீடு
சபரிமலைக்கு வனப் பாதை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in