குழந்தைத் திருமணங்களை தடுக்க 100 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்

மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்
மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி

மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி

Updated on
1 min read

புதுடெல்லி: குழந்​தைத் திரு​மணங்​களைத் தடுக்க 100 நாள் தீவிர விழிப்​புணர்வு பிரச்​சா​ரத்தை மத்​திய பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் அன்​னபூர்ணா தேவி நேற்று தொடங்கி வைத்​தார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: குழந்​தைத் திரு​மணங்​களைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. அதன்​பிறகு அவ்​வப்​போது இந்த சட்​டம் பலப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக கடந்த 2006ம் ஆண்டு இயற்​றப்​பட்ட சட்​டம் இப்​போது அமலில் உள்​ளது. ஆனாலும் இந்த முறை இன்​ன​மும் சில இடங்​களில் நீடிக்​கிறது.

குழந்​தைத் திரு​மணங்​களை நாட்டு மக்​கள் சகித்​துக் கொள்​ளக்​கூ​டாது. நம் நாட்​டில் நடை​பெறும் ஒரு குழந்​தைத் திரு​மணத்​தைக் கூட ஏற்​றுக் கொள்​ளக் கூடாது. எனவே, இந்த நடை​முறையை ஒழிக்க மாநில அரசுகள், சமூகக் குழுக்​கள் மற்​றும் சமூக தலைவர்​கள் ஒன்​றிணைந்து அர்​ப்பணிப்பு உணர்​வுடன் செயல்பட வேண்​டும்.

குழந்​தைத் திரு​மணம் என்​பது வெறும் சட்ட மீறல் மட்​டுமல்ல. அது ஒரு மகளின் குழந்​தைப் பரு​வத்​தையே பறித்​து, அவளை சிறு வயதிலேயே குழந்தை பெற்​றுக் கொள்ள வேண்​டிய நிலைக்கு தள்​ளுகிறது. இதனால் கற்​பனை செய்ய முடி​யாத துன்​பத்தை சிறுமிகள் அனுபவிக்க வேண்டி உள்​ளது.

பெண் குழந்​தைகளை பாது​காப்​போம், பெண் குழந்​தைகளுக்கு கல்வி அளிப்​போம் என்ற மத்​திய அரசின் முயற்​சிக்கு நல்ல பலன் கிடைத்​துள்​ளது. குறிப்​பாக, பாலின விகிதம் அதி​கரித்து வருவதுடன் உயர்​கல்​வி​யில் பெண்​கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

நமது மகள்​கள் முன் எப்​போதும் இல்​லாத வகை​யில் வேக​மாக முன்​னேறி வரு​கிறார்​கள். குறிப்​பாக, விளை​யாட்​டு, ராணுவம், சுரங்​கம், விண்​வெளி உட்பட அனைத்து சவாலான பணி​களி​லும் பெண்​கள் வரலாறு படைத்து வரு​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி</p></div>
ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in