3-வது ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி​

3-வது ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி​
Updated on
2 min read

குவாஹாட்டி: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 3-வது டி20 கிரிக்​கெட் போட்டி குவாஹாட்​டி​யில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இதில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்சத்​தில் தொடரை கைப்​பற்​றும்.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் நாக்​பூரில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. நேற்று முன்​தினம் ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இதன் மூலம் இந்​திய அணி தொடரில் 2-0 என முன்​னிலை வக்​கிறது. இந்​நிலை​யில் 3-வது ஆட்​டம் குவாஹாட்​டி​யில் இன்று நடை​பெறுகிறது.

2-வது போட்​டி​யில் 209 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 15.2 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் 32 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களடன் 76 ரன்​களும், கேப்டன் சூர்​யகு​மார் யாதவ் 37 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறார். அவரது தொடக்க இடத்​துக்​காக ஷுப்​மன் கில், டி20 உலகக் கோப்பை அணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டிருந்​தார். ஆனால் உலகக் கோப்பை தொடருக்கு பயிற்​சி​யாக அமைந்​துள்ள நியூஸிலாந்து தொடரில் சஞ்சு சாம்​சன் கிடைத்த வாய்ப்​பு​களை சரி​யாக பயன்​படுத்​திக்​கொள்​ள​வில்​லை.

முதல் ஆட்​டத்​தில் 10 ரன்​களி​லும், 2-வது ஆட்​டத்​தில் 6 ரன்​களி​லும் வெளி​யேறிய சஞ்சு சாம்​சன் தனது இடத்தை தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் கணிச​மான அளவில் ரன்​கள் குவித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளார். அதிவேகத்​தில் வீசப்​படும் பந்​துகளை கட்​டுப்​பாடு இல்​லாமல் விளை​யாடி சஞ்சு சாம்​சன் ஆட்​ட​மிழப்​பது வாடிக்​கை​யாக மாறி உள்​ளது.

இந்த ஆண்​டில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான தொடரில் சஞ்சு சாம்​சன் 5 முறை வேகப்​பந்து வீச்​சில் ஆட்​ட​மிழந்து இருந்​தார். தற்​போதைய தொடரிலும் அவர், கைல் ஜேமிசன் மற்​றும் மேட் ஹென்​றி​யிடம் ஆட்​ட​மிழந்​தார். டி20 உலகக் கோப்பை நெருங்​கு​வ​தால் இந்த பலவீனத்​தில் இருந்து மீள்​வதற்​கான வழிகளை சஞ்சு சாம்​சன் கண்​டறியக்​கூடும்.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி தொடரில் 0-2 என பின்​தங்கி உள்​ளது. அந்த அணி இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். 2-வது போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் பீல்​டிங் மோச​மாக அமைந்​திருந்​தது. மிட்​செல் சாண்ட்​னர், இஷ் சோதி, டென் கான்வே ஆகியோர் முக்​கிய​மான கட்​டங்​களில் கேட்ச்​களை தவற​விட்டு இருந்​தனர்​. இன்​றைய ஆட்​டம்​ முக்​கியத்​துவம்​ ​வாய்​ந்​தது என்​ப​தால்​ நியூஸிலாந்​து அணி அனைத்​து துறையிலும்​ மேம்​பட்​ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

3-வது ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி​
நக்சல் இல்லாத மாவட்டமாக ஒடிசாவின் நவரங்பூர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in