மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியீடு

மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய உள்​துறை சார்​பில் தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சில அண்டை நாடு​கள் தீவிர​வாதத்தை நாட்​டின் கொள்​கை​யாக கடைப்​பிடித்து வரு​கின்​றன. இதனால் இந்​தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக மத்​திய அரசு உறுதியுடன் செயல்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படு​கிறது.

இதன்​படி தீவிர​வாத தாக்​குதல்​களை முன்​கூட்​டியே தடுத்து இந்திய மக்​களை பாது​காக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். தீவிரவாத தாக்​குதல்​களின்​போது அதி​விரை​வாக பதிலடி கொடுக்கப்​படும். தீவிர​வாதத்​துக்கு எதி​ராக அரசின் அனைத்து துறை​களும் இணைந்து செயல்​படும். தீவிர​வாத அச்சுறுத்தல்களால் பாதிக்​கப்​படும் மக்​களுக்கு தேவை​யான மனிதாபி​மான உதவி​கள், சட்ட உதவி​கள் கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

நாட்​டின் அனைத்து பகு​தி​களில் இருந்​தும் தீவிர​வாதம் வேரறுக்கப்​படும். தீவிர​வாதத்​துக்கு எதி​ராக உலக நாடு​களு​டன் இந்​தியா ஒன்​றிணைந்து செயல்​படும். தீவிர​வாதத்​தால் பாதிக்கப்படும் பகு​தி​களில் விரைந்து மறுசீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். அல்​-​காய்​தா, ஐஎஸ்​ உள்​ளிட்ட தீவிர​வாத குழுக்​களால் இந்​தி​யா​வுக்கு தொடர்ந்து அச்​சுறுத்​தல் நீடிக்​கிறது.

இந்த குழுக்​களை சேர்ந்த தீவிர​வா​தி​கள் அந்​நிய மண்​ணில் பதுங்கி​யிருந்து இந்​தி​யா​வுக்கு எதி​ரான நாசவேலைகளில் ஈடுபடுகின்​றனர். இதற்கு சில அண்டை நாடு​களும் துணை​போகின்​றன. தீவிர​வா​தி​களுக்கு அண்டை நாடு​களில் இருந்து ட்ரோன்​கள் மூலம் ஆயுதங்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. இதை தடுக்க பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வருகின்றன. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியீடு
சூடாகும் தேர்தல் களம்... சுத்துப் போடத் தயாராகும் பாஜக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in