மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு
Updated on
1 min read

குவாஹாட்டி: நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கை​யில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்​பிஎப் கோப்ரா கமாண்​டோக்​களை மணிப்​பூரில் நிறுத்த மத்​திய உள்​துறை அமைச்​சகம் உத்​தர​விட்​டுள்​ளது.

மணிப்​பூரின் மலைப் பகுதி மாவட்​டங்​களில் மீண்​டும் ஏற்பட்டுள்ள பதற்​றம் மற்​றும் கடந்த இரண்டு மாதங்​களாக ஆங்காங்கே நிகழும் வன்​முறைச் சம்​பவங்​களுக்கு மத்​தி​யில் இம்முடிவு எடுக்கப்​பட்​டுள்​ளது. சமீபத்​தில் மணிப்​பூருக்​குச் சென்ற சிஆர்​பிஎஃப் இயக்​குநர் ஜி.பி.சிங், இந்த கமாண்​டோக்​களை பணியில் ஈடு​படுத்​து​ வதற்​கான ஏற்​பாடு​களை நேரில் பார்வையிட்​ட​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. ஜி.பி.சிங் தனது பயணத்​தில் மணிப்​பூரின் பல்​வேறு பகு​தி​களுக்​குச் சென்று அங்குள்ள அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களு​டன் கலந்​துரை​யாடி, பாது​காப்பு நிலை​மை​களை ஆய்வு செய்​தார்.

இதுகுறித்து சிஆர்​பிஎப் இயக்​குநர் ஜி.பி.சிங் கூறுகை​யில், “எந்தவொரு உயர்​நிலை கமாண்டோ பிரிவுக்​கும் தங்​களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்​றிக்​கொள்​ளும் திறன் மிக அவசி​ய​மான பண்​பாகும். கோப்ரா வீரர்​களுக்கு பணிக்கு முந்​தைய பயிற்சியுடன் மணிப்​பூரின் சூழலைப் புரிந்​து​கொள்​வதற்​கான பயிற்​சி​யும் அளிக்​கப்​படும். மேலும் அவர்​கள் மணிப்​பூரில் தங்கியிருக்​கும் போது தங்​களது திறன்​களை இன்​னும் கூர்மைப்படுத்​திக் கொள்​வார்​கள்" என்​றார்.

மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி: என்டிஏ அரசின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in