தாய், குழந்தைகள் நலனை மேம்படுத்த மத்திய அரசின் ஜனனி தளம் அறிமுகம்

தாய், குழந்தைகள் நலனை மேம்படுத்த மத்திய அரசின் ஜனனி தளம் அறிமுகம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நல அமைச்​சகம் 'ஜனனி' என்ற டிஜிட்​டல் தாய்​-குழந்தை நல சுகா​தா​ரத் தளத்தை நேற்று தொடங்​கியது.

இது குறித்து மத்​திய சுகா​தார அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் சுகா​தார எதிர்காலத்தை வடிவ​மைக்​கும் சிறந்த நடை​முறை​களை வழங்குவதற்​கான தேசிய உச்சி மாநாட்​டில் ஜனனி என்ற தளம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இது தற்​போதுள்ள குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை ஆரோக்​கிய (ஆர்​சிஹெச்) இணை​ய தளத்​தின் மேம்​படுத்​தப்​பட்ட பதிப்​பாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தளம் தாய் மற்​றும் குழந்தை ஆரோக்​கி​யத்​தின் சிறந்த ஒருங்​கிணைப்பு மற்​றும் தரவு அடிப்​படையி​லான முடிவெடுத்தலை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது. பெண்​களின் குழந்தை பிறப்பு காலத்​தில் அவர்​களின் பிரசவத்​துக்கு முந்​தைய பராமரிப்​பு, பிரசவம், பிரசவத்​துக்​குப் பிந்​தைய பராமரிப்​பு, குழந்தை பராமரிப்பு மற்​றும் குடும்​பக் கட்​டுப்​பாடு உள்​ளிட்ட முக்கிய சுகா​தார சேவை​களைக் கண்​காணிப்​ப​தன் மூலம் நீண்ட கால டிஜிட்​டல் சுகா​தா​ரப் பதிவு​களைப் பராமரிக்க இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

ஜனனி திட்​டத்​தின் முக்​கிய அம்​சம் QR-குறி​யீடு கொண்ட டிஜிட்டல் தாய்​-சேய் நல (எம்​சிஹெச்) அட்​டைகள் ஆகும். இவை சுகா​தா​ரப் பதிவு​களை எளி​தாக அணுக​வும், எங்கு வேண்டுமானாலும் பயன்​படுத்​த​வும் வழி​வகுக்​கிறது. அதிக ஆபத்துள்ள கர்ப்​பங்​களைக் கண்​டறிந்து தானி​யங்கி எச்சரிக்கைகளை வழங்​குதல், வரவிருக்​கும் மருத்​து​வப் பரிசோதனை​களின் பட்​டியலை உரு​வாக்​குதல் மற்​றும் நிகழ்​ நேர கண்​காணிப்பு டாஷ்​போர்​டு​கள் ஆகிய​வை​யும் இதில் அடங்​கும்.

இந்​தத் தளத்​தில் இது​வரை 1.34 கோடி பயனாளி​கள் பதிவு செய்துள்​ளனர். 30 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கர்ப்​பிணிப் பெண்கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளனர். 30 லட்​சத்​துக்​கும் அதிகமான தாய்​- சேய் நல அட்​டைகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பயோமெட்​ரிக் சரி​பார்ப்​பு​கள்​ செய்யப்பட்​டுள்​ளன.

தாய், குழந்தைகள் நலனை மேம்படுத்த மத்திய அரசின் ஜனனி தளம் அறிமுகம்
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியா? - திரை மறைவு வியூகமும், உறுதி செய்யும் அறிகுறிகளும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in